Photo

ரபீவுல் அவ்வல் மாதம் வந்தாலே முஸ்லிம்களில் சிலருக்கு பெரும் மகிழ்ச்சியும் சந்தோசமும் வந்துவிடும். காரணம் இது நபி(ஸல்) அவர்கள் பிறந்த மாதம். இது அருள் நிறைந்த மாதம். உலகத்தை ஒளிபெறச் செய்யும் மாதமுமாகும், ஆகவே இந்த மாதத்தை கொண்டாடும் மாதமாக எடுத்துக் கொள்வது நபி(ஸல்) அவர்களை நேசிக்கும் அடையாளமாகும் என்று எண்ணி மீலாது விழாக்களும் மெளலிது ஷரீபுகளும்(?) வெகு கோலாகலமாக பல முஸ்லிம்களின் வீடுகளிலும் பள்ளிகளிலும் நடைபெறும். இஸ்லாத்திற்கும் இச்செயலுக்கும் என்ன தொடர்பிருக்கிறது என்பதை தெரிந்து கொள்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்....



ஆறாம் நூற்றாண்டின் கடைசி அல்லது ஏழாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், இர்பில் நாட்டை ஆட்சி செய்து கொண்டிருந்த மன்னர் முளஃப்பர் அபூ ஸயீத் கோக்பூரி என்பவர் இவர்களுக்குப் பின் மக்கள் மத்தியில் இந்த மீலாது மேடையையும் மெளலிது ஷரீபையும்? மிக பிரபல்லியப்படுத்தினார்.

இப்னு கதீர்(ரஹ்) அவர்கள் 'அல்பிதாயா வன்னிஹாயா' என்னும் வரலாற்றுக் குறிப்பில் 'அபூ ஸயீத் கோக்பூரியின்' வரலாற்றைக்கூறும் போது...

ரபீவுல் அவ்வல் மாதத்தில் மெளலிது ஓதி மாபெரும் மீலாதுவிழாக் கொண்டாடுவார். இவர் ஏற்பாடு செய்யும் மெளலிது விருந்துபசாரத்தில் சுடப்பட்ட ஐந்தாயிரம் ஆடுகளும் பத்தாயிரம் கோழிகளும் ஒரு இலட்சம் தயிர்க்கோப்பைகளும் முப்பது ஆயிரம் ஹல்வாத் தட்டுக்களும் ஏற்பாடு செய்வார் என்று, இவர் ஏற்பாடு செய்த சில மெளலிது விருந்துபசாரத்தில் கலந்து கொண்ட ஒரு சிலர் கூறினார்கள். இன்னும் ளுஹர் நேரத்திலிருந்து ஃபஜ்ர் நேரம் வரை ஸுஃபியாக்கள் பாட்டுப்பாடுவதற்காக ஒலிபெருக்கிகளை ஏற்பாடு செய்து அவர்களுடன் சேர்ந்து இவரும் நடனமாடுவார். ஆதாரம்: அல்பிதாயா வன்னிஹாயா
அன்புள்ள சகோதர சகோதரிகளே!
இதுதான் மீலாது விழாவின் லட்சணம்! இவர்கள்தான் மீலாது விழாவை உலகிற்கு இறக்குமதி செய்தவர்கள் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். இதுதான் நபி(ஸல்) அவர்களை நேசிக்கும் முறையா? நிச்சயமாக இல்லை. நபி(ஸல்) அவர்கள் கொண்டு வந்த மார்க்கத்தைப் பின்பற்றுவதுதான் அவர்களைப் நேசிப்பதற்கு உண்மை அடையாளமாகும்.
மீலாது விழா கொண்டாடுபவர்கள் எடுத்து வைக்கும் சில சந்தேகங்களும் அதற்குரிய விடைகளும்
சந்தேகம் -1
மீலாது விழாக் கொண்டாடுவது நபி(ஸல்) அவர்களை கண்ணியப்படுத்தவதாகும்.
விடை: நபி(ஸல்) அவர்களை கண்ணியப்படுத்துவதென்பது அவர்கள் ஏவியதை எடுத்தும், தடுத்ததை தவிர்த்தும் நடப்பதாகும். பித்அத்துக்களையும் பாவங்களையும் செய்வது நபி(ஸல்) அவர்களை கண்ணியப்படுத்துவதாகாது. மீலாது விழாக் கொண்டாடுவது அந்த பாவமான காரியத்தைச் சேர்ந்ததே. நபித்தோழர்கள் நபி(ஸல்) அவர்களை அதிகம் கண்ணியப்படுத்தியவர்கள். அவர்கள் மீலாது மேடை நடத்தவில்லை. மீலாது மேடை நடத்துவது நபி(ஸல்) அவர்களை கண்ணியப்படுத்தவதாக இருந்திருந்தால் நிச்சயம் அதை நபித்தோழர்கள் செய்திருப்பார்கள். நபித்தோழர்கள் நபி(ஸல்) அவர்களை எந்தளவு கண்ணியப்படுத்தினார்கள் என்பதை பின்வரும் ஹதீது தெளிவுபடுத்துகின்றது.
உர்வா இப்னு மஸ்ஊத்(ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: அல்லாஹ்வின் மீது ஆணையாக நான் கைஸர், கிஸ்ரா, நஜ்ஜாசி மன்னர்களிடம் சென்றிருக்கின்றேன். அல்லாஹ்வின் மீது ஆணையாக நபி(ஸல்) அவர்களின் தோழர்கள் நபி(ஸல்) அவர்களை நேசிப்பது போல் வேறு எந்த மன்னர்களையும் அவர்களின் தோழர்கள் நேசிப்பதாக நான் பார்க்கவில்லை. (ஹதீஸின் ஒரு பகுதி)
ஆதாரம்: புகாரி
இவ்வளவு கண்ணியம் காத்த நபித்தோழர்கள் ஒரு தடவைகூட மீலாது மேடை நடத்தவில்லை. மீலாது மேடை நடத்துவது நபி(ஸல்) அவர்களை கண்ணியப்படுத்துவதாக இருந்திருந்தால் நிச்சயம் அதைச் நபித்தோழர்கள் செய்திருப்பார்கள்.
சந்தேகம் -2
பல நாடுகளில் அதிக மக்கள் செய்கின்றார்கள்.
விடை: நபி(ஸல்) அவர்களின் வழிகாட்டுதல்தான் ஆதாரமாகும். மக்கள் செய்யும் செயல்கள் ஆதாரமாக முடியாது, அவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும் சரியே. நபி(ஸல்) அவர்கள் எல்லா பித்அத்துக்களையும் தடுத்துள்ளார்கள். மீலாது மேடையும் அந்த வகையைச் சேர்ந்ததே. மனிதர்கள் செய்யும் செயல்கள் குர்ஆன் ஹதீதுக்கு மாற்றமாக இருந்தால் அதை ஏற்றுக் கொள்ளக்கூடாது அவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும் சரியே.
அல்லாஹ் தன் திருமறையில் இவ்வாறு கூறுகின்றான்.
பூமியில் உள்ளவர்களில் பெரும்பாலோரை நீர் பின்பற்றுவீரானால் அவர்கள் உம்மை அல்லாஹ்வின் பாதையை விட்டு வழிகெடுத்து விடுவார்கள். (ஆதாரமற்ற) வெறும் யூகங்களைத்தான் அவர்கள் பின்பற்றுகிறார்கள். இன்னும் அவர்கள் (பொய்யான) கற்பனையிலேயே மூழ்கிக்கிடக்கிறார்கள். (அல்குர்ஆன் 6:116)
சந்தேகம் - 3
மீலாது விழா கொண்டாடி நபி(ஸல்) அவர்களை நினைவு படுத்துகின்றோம்.
விடை: நபி(ஸல்) அவர்களை ஒவ்வொரு நாளும் ஒரு முஸ்லிம் நினைவுபடுத்தியாக வேண்டும். நாம் செய்யும் பர்லான சுன்னத்தான ஒவ்வொரு அமல்களும் இன்னும் நபி(ஸல்) அவர்களின் வழிகாட்டலின்படி நாம் செய்யும் ஒவ்வொரு செயல்களும் நபி(ஸல்) அவர்களின் நினைவூட்டலே. நபி(ஸல்) அவர்களின் பெயரைக் கூறாமல் அதான் இகாமத் சொல்ல முடியுமா....???????

0 கருத்துகள்:

துஆக்கள்

தொழிநுட்ப தகவல்கள்

Live TV

ONISLAAM SMS சேவை

SMS ஐ Active செய்ய


Type F (space) ONISLAAM and Send it to 40404 -on Your Mobile Phone (in Sri Lanka & Others, Click Here) ........... F இடைவெளி ONISLAAM என Type செய்து 40404 ற்கு அனுப்புங்கள் (இலங்கையில்)...... ஏனைய நாட்டவர்கள்--- இங்கு Click செய்யுங்கள்

பார்வையாளர்கள்

பிரமலமானவை

செய்திகள்

உங்கள் IP இலக்கம்

Sign by Danasoft - For Backgrounds and Layouts