சம்மாந்துறை நெல்லுப்பிடிச் சந்தியில் இன்று காலை பாரிய கனரக வாகனம் ஒன்று ஆற்றில் பாய்ந்து விபத்துக்குள்ளானது .
இன்று காலை 6.30 மணியளவில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது அம்பாறையில் இருந்து இந்த கனரக வாகனம் மின்கம்பங்களை ஏற்றி வந்த வேளை நெல்லுப்பிடிச்சந்தியில் உள்ள ஆற்றில் பாய்ந்தபோதே விபத்துக்குள்ளானது.
அம்பாறையைச் சேர்ந்த வாகன சாரதி ருவன் சம்பத் வயது 33,வாகன உதவியாளர் எஸ்.ஏ. குலரத்ன வயது 49 ஆகிய இருவரும் மிகவும் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டனர்.
போலீஸ் மற்றும் இராணுவத்தினரின் இரண்டு மணிநேர போராட்டத்தின் பின்னரே இவர்கள் இருவரும் மீட்கப்பட்டனர். மிகுந்த ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டவர்கள் இருவரும் சம்மாந்துறை அன்வர் இஸ்மாயில் ஆதார வைத்தியசாலையில் அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக அம்பாறை போதனா வைத்தியசாலைக்கு
இடமாற்றப்பட்டுள்ளனர்.

0 கருத்துகள்: