சித்ரவதை செய்து கைதி ஒருவரைக் காவலர்கள் கொன்ற சம்பவம் உத்தரபிரதேசத்தில் கொந்தளிப்பினை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேசத்தில் உள்ள எட்டா மாவட்டத்தில் கடந்த மாதம் நடைபெற்றக் கொலைச்
சம்பவத்தில் சம்பந்தப்பட்டவர் எனக்கருதப்படும் பல்பீர் என்ற நபரைக் கைது
செய்தனர். எட்டா சிறையில் அடைக்கப்பட்டிருந்த பல்பீருடைய உடல் நிலை
மோசமடைந்ததை அடுத்து மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருடைய உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படாததையடுத்து லக்னோவில் மன்னர்
ஜார்ஜ் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டார். அங்கு அளித்த
சிகிச்சையிலும் பலனில்லாமல் பல்பீர் நேற்று (17.05.2013) அன்று மரணம்
அடைந்தார்.
இறப்பதற்கு முன்பாக அவர் நீதிபதியிடம் மரண வாக்குமூலம்
அளித்துள்ளார். இது ஒளிப்பேழையில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த
வாக்குமூலத்தில் பல்பீர், ”காவலர்கள் அவர்கள் கேட்டுக் கொண்டபடி
குற்றத்தினை ஒத்துக் கொள்ளாததால் ஊசி மூலம் அமிலம் மற்றும் பெட்ரோல்
ஆகியவற்றினை தனது உடலில் ஏற்றினர்” என்றுத் தெரிவித்துள்ளார். இதனால்
அவருடைய உடல்நிலை பாதிக்கப்பட்டதாக பல்பீர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சித்ரவதைக்கொலையினால் உத்தரபிரதேச மக்கள் கொதிப்படைந்துள்ளனர். இந்தக்
கொலையில் சம்பந்தப்பட்ட எட்டா காவல்நிலைய துணை ஆய்வாளர் மற்றும் மூன்று
காவலர்கள் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
0 கருத்துகள்: