பலஸ்தீனத்தில் சுதந்திரக் காற்றை சுவாசிப்பதற்காக தினமும் உயிரை தியாகம் செய்து
கொண்டிருக்கும் இன்று உலகம் அதிசயிக்கும் வண்ணம் ஓர் வியக்கும் வண்ணம்
பலஸ்தீனம் செய்திருக்கிறது. சில தினக்களுக்கு முன்னர் பலஸ்தீனம் மேற்கு கரை
பகுதியில் உள்ள அல்லார் என்ற 9000 பேர்கள் மக்கள் தொகை கொண்ட சிறு
நகரத்தின் நகராட்சி மேயராக பதினைந்தே வயதான பள்ளிக்கூடம் செல்லும் இளம்
மாணவி பஷீர் ஒத்மான் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது பாராட்டுதற்குரியது.
இஸ்ரேலின் ஆக்கிரமிப்புக்கிடையிலும் அந்த நாட்டில் ஒரு இளம் மாணவி மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. வாழ்த்துக்குரியது. இளைஞர்கள் மத்தியில் ஆளுமை குணத்தையும், தலைமைப் பண்பையும் வளர்க்கும் கூடிய முற்போக்கான சிந்தனை என பலர் பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர்.
மேயராக தேர்ந்தெடுக்கப்பட்ட பஷீர் என்ற அந்த மாணவி வெறும் சம்பிரதாயமாகவோ அல்லது பெயரளவிலோ மேயராக அலங்கரித்து அழகு பார்க்காமல், நகராட்சி அதிகாரங்களை அந்தப்பெண்ணின் கையில் கொடுத்திருப்பது என்பது பாராட்டுதற்குரியது. அந்த மாணவியே தன்னிச்சையாக நகராட்சி அலுவல்களை கவனிப்பதாகவும் கோப்புகளில் கையெழுத்திட்டு நகராட்சிக் கூட்டங்களுக்கும் தலைமை தாங்கி நடத்துகிறார் என்பது எவ்வளவு மகிழ்ச்சிகரமான விடயம்.
மக்களை சந்தித்து குறைகளையும் கேட்கும் அம் மாணவி மக்களின் முன்னிலையில் கூட்டங்களில் சுதந்திரமாக பேசுவதாகவும் இவை அனைத்துக்கும் நடுவில் தனது பள்ளிப்படிப்பையும் பாடசாலைக்கு செல்வதையும் முக்கியமாக செய்து வருகிறார். மிகப்பெரிய மக்கள் பணியை செய்யும் பஷீர், மக்களை கவர்ந்திழுக்கும் பலம் வாய்ந்த மேயராக திகழ்கிறார் அந்த மக்கள் அவரை ஒரு மாணவி என நினைக்காமல் தங்களுக்கு சேவை செய்ய வந்த தலைவர் என நினைக்கிறார்கள். எதிர்காலத்தில் தன் நாட்டை ஆளக்கூடிய பெரிய தலைவராக வரவேண்டும் என்பதே பஷீரின் ஆவலும், கனவும், இலட்சியமும் ஆகும். உலகத்திலேயே சிறிய வயது மேயரான பஷீர் ஒத்மான் தனது இலட்சியத்தில் வெற்றிபெற நாமும் பிரார்த்திப்போம்.
நன்றி : முஹம்மத் பாரிஸ்.

0 கருத்துகள்: