லண்டன்:
முன்னாள் பிரித்தானிய பிரதமர் டோனி பிளயரின் மைத்துனியான லோரன் பூத், 45,
கடந்த மாதம் தான் விரும்பிய சமூக ஆர்வளரான சொஹைல் அகமட், 49, என்பரை
இரகசியமாகத் திருமணம் செய்தார்.
தனது 16 வருட திருமணத்தை உடைத்தெறிந்துவிட்டு, 3 பிள்ளையின் தந்தையான அகமட் சொஹைல் என்பவரைத் திருமணம் செய்தார் லோரன் பூத்.
2010 இல் இஸ்லாத்தைத் தழுவியிருந்த லோரன் பூத், உலகளவில் பிரபல்யமடைந்து
வந்தார். 2010 இல் தான் ஈரானில் சமூக ஆர்வளராக இருந்தபோது தனக்கு ஏற்பட்ட
இஸ்லாமிய உணர்வுகளும், மாற்றங்களுமே என்னை இஸ்லாத்தின்பால் அழைத்துச்
சென்றதாக அப்போது தெரிவித்து, இஸ்லாத்தைத் தழுவி இருந்தார்.
தான்
தற்பொழுது பன்றி இரைச்சி உண்பதில்லை. மதுவும் 45 நாட்களாக அருந்தவில்லை.
குர்ஆனை படித்து வருகிறேன். தற்பொழுது 60வது பக்கத்தில்
படித்துக்கொண்டிருக்கிறேன்” என்பதாக ஆங்கில ஊடகங்களுக்கு அன்று
பகிரங்கமாகத் தெரிவித்திருந்தார்.
குறிப்பாக யுத்தத்தால்
எதிர்நோக்கும் மத்திய கிழக்கில் தனது சமூகப் பணிகளை மேற்கொண்டு வந்த லோரன்
பூத், ‘அங்குள்ள மக்களின் இஸ்லாமிய நம்பிக்கைகளும், செயற்பாடுகளும் தன்னை
மாற்றி அமைத்ததுடன் மதுவுக்கு அடிமையான என்னை முதலில் அதன்பாலிருந்து
முற்றாக அகற்றியது’ எனவும் கூறினார்.
புதுத் தம்பதிகளான இருவரும்
தற்பொழுது பலஸ்தீன் மக்களுக்காக நன்கொடை நிதியத்தினை ஏற்படுத்தி
இருப்பதுடன், பலஸ்தீன் மக்களுக்காக தொடர்ந்தும் தொண்டாற்றவிருப்பதாகவும்
தெரிவித்திருக்கின்றனர்.
0 கருத்துகள்: