ஏமன் நாட்டு குற்றவாளிகள் 5 பேரை கொலைச்செய்த சவுதி அரசு அவர்கள் உடல்களை பொது இடத்தில் பார்வைக்கு வைத்துள்ளது.
கைது செய்யப்பட்ட இவர்கள் ஐவரும் ஒரு குழுவாக குற்றங்களைச் செய்து
வந்ததாகவும், சவூதி நாட்டைச் சேர்ந்த ஒருவரைக் கொன்றதாகவும் அந்நாட்டின்
உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
புனிதத்திற்கும், மற்றவர்களின் ரத்தத்திற்கும் மதிப்பு கொடுக்காத இந்தக்
குற்றவாளிகளின் உடல்கள் பொது இடத்தில் கிடத்தப்பட வேண்டும். நாட்டில்
ஊழலும், லஞ்சமும் இருப்பதை மற்றவர் உணரவேண்டும் என்று சவுதியின் நீதிமன்றம்
இத்தகைய தீர்ப்பை வெளியிட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
எதிர்காலத்தில் குற்றங்கள் செய்ய எண்ணுவோருக்கும் இது ஒரு எச்சரிக்கையாக
இருக்கவேண்டும் என்ற நோக்கத்தில் இன்று கொலைச் செய்யப்பட்ட அவர்களின்
உடல்கள், சவுதியின் தென்பகுதியில் உள்ள ஜாசன் நகரின் ஒரு சதுக்கத்தில்
கிடத்தப்பட்டிருந்தன.
இஸ்லாம் மதத்தைத் தீவிரமாகப் பின்பற்றும்
இந்த நாட்டில், கொலை, கொள்ளை, கற்பழிப்பு, போதைப் பொருள் கடத்தல் போன்ற
குற்றங்களுக்கு, குற்றவாளிகளின் தலையை வெட்டியோ அல்லது துப்பாக்கியால்
சுட்டோ மரண தண்டனை வழங்கப்படுகிறது.
0 கருத்துகள்: