தம்புள்ளை ஹைரியா ஜும்ஆ பள்ளிவாசல் நிர்மாணத்திற்கு முன்னின்று செயற்பட்டு அதற்கான காணியில் ஒரு பகுதியையும் அன்பளிப்புச் செய்த ஸ்தாபகரான உதுமான் சாஹிபு மொஹமட் இப்றாஹிம் நேற்று இரவு காத்தான்குடியில் வபாத்தானார்.


காத்தான்குடியைப் பிறப்பிடமாகக் கொண்ட உதுமான் சாஹிபு மொஹமட் இப்றாஹிம் வியாபார நோக்கமாக தம்புள்ளைக்கு வந்து வர்த்தக நிலையமொன்றை நிறுவினார்.1963 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தம்புள்ளையில் பள்ளிவாசலொன்று நிறுவப்பட வேண்டுமென வர்த்தகர் சிலருடன் மசூரா செய்து எடுக்கப்பட்ட தீர்மானத்தின் படியே பள்ளிவாசல் நிறுவப்பட்டது.

பள்ளிவாசல் நிறுவப்படும் வரை அவரது வர்த்தக நிலையத்தில் தேயிலை களஞ்சியசாலையில் தொழுகைகளுக்காக இடம் ஒதுக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. உதுமான் சாஹிபு மொஹமட் இப்றாஹிமின் மறைவு பள்ளிவாசலுக்கு பேரிழப்பாகும் என நிர்வாக சபை உறுப்பினர் ரஹ்மத்துல்லாஹ் தெரிவித்தார்.

அன்னாரின் ஜனாஸா இன்று திங்கட்கிழமை அஸர்தொழுகைக்குப் பின்பு காத்தான்குடி ராசிக் பரீத் மாவத்தை 3 ஆம் இலக்க இல்லத்திலிருந்து எடுத்துச் செல்லப்பட்டு காத்தான்குடி ஜும்ஆ பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

0 கருத்துகள்:

துஆக்கள்

தொழிநுட்ப தகவல்கள்

Live TV

ONISLAAM SMS சேவை

SMS ஐ Active செய்ய


Type F (space) ONISLAAM and Send it to 40404 -on Your Mobile Phone (in Sri Lanka & Others, Click Here) ........... F இடைவெளி ONISLAAM என Type செய்து 40404 ற்கு அனுப்புங்கள் (இலங்கையில்)...... ஏனைய நாட்டவர்கள்--- இங்கு Click செய்யுங்கள்

பார்வையாளர்கள்

பிரமலமானவை

செய்திகள்

உங்கள் IP இலக்கம்

Sign by Danasoft - For Backgrounds and Layouts