மத்திய பிரதேசம்: மத்தியபிரதேசம் மாநிலத்தில் தலித் சிறுமி மேல் ஜாதியினை சேர்ந்தவரால் உயிருடன எரிக்கப் பட்டுள்ளார்.
மத்திய பிரதேசத்தில் உள்ள காய்ரத்கஞ்ச் என்ற இடத்தில், வீட்டு வேலை செய்து
வந்த 15 வயது சிறுமியிடம் அந்த வீட்டின் உரிமையாளர் மகன் தகாத முறையில்
நடந்துள்ளான்.
இதனை தனது பெற்றோரிடம் அந்த சிறுமி கூறியுள்ளார்.
இதனையடுத்து சிறுமியின் பெற்றோர் காவல்துறையினரிடம் புகார் செய்யவே இளைஞன்
கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டான்.
இதனால் ஆத்திரம்
கொண்ட இளைஞனின் தந்தை சிறுமியின் வீட்டுக்குச் சென்று, மண்ணெண்ணெய் ஊற்றி
சிறுமியை எரித்துள்ளார். உயிருக்கு ஆபத்தான நிலையில் சிறுமி
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
0 கருத்துகள்: