கடலோர புகையிரத மார்க்கத்தின் பேருவளைக்கும் மக்கொனைக்கும் இடைப்பட்ட பிரதேசத்தில் உள்ள மாகல்கந்த ரொக்லெண்ட்
சந்தியில் இடம்பெற்ற புகையிரத- பஸ் விபத்தில் 23 பேர் காயமடைந்த நிலையில்
நாகொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ் ஊடகப்
பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரசாந்த ஜயகொடி தெரிவித்தார்.
இவர்களில் நால்வரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். இன்றுமாலை 6.45 மணியளவில் குறித்த சம்பவம் இடம்பெற்றதாகவும் இதனை அடுத்து காயமடைந்தவர்கள் உடனடியாக வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
குறித்த விபத்தை அடுத்து பஸ் வண்டியானது பாதையில் சரிந்து விழுந்ததாகவும் பொலிசாரின் உதவியுடன் அதிலிருந்தவர்கள் மீட்கப்பட்டதாகவும் சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.

0 கருத்துகள்: