மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுத் தலைவரும் பொருளாதார அபிவிருத்திப்
பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் முயற்சியின் கீழ்
ஆசியாவின் முதலாவது பிரதான வீதியின் பொது மக்கள் தொடர்பாடல் ஒலிபெருக்கிக்
கட்டமைப்பு இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை மட்டக்களப்பு கல்முனை
காத்தான்குடி பிரதான நெடுஞ்சாலையில் திறந்துவைக்கப்பட்டது.
இதன் பிரதிபலனாக பிரதான வீதியில் மின்கம்பங்களில் பொருத்தப்பட்டுள்ள விஷேட
ஒலிபெருக்கி மூலம் ஐவேளை தொழுகைக்கான அதான் ஒலிபரப்பும் விஷேட தினங்களின்
போது முற்றிலும் இஸ்லாமிய கலாச்சாரத்துக்கு அமைவான அம்சங்களும் இதில்
ஒலிபரப்பப்படும்.
இவ் அங்குரார்ப்பண வைபவம் நகரசபையின் பதில்; தவிசாளர் எம்.ஐ.எம்.ஜெஸீம்
தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் பொருளாதார அபிவிருத்திப்
பிரதியமைச்சர்எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் பிரதம அதிதியாக கலந்தகொண்டு இதன்
கட்டுப்பாட்டறையினை இன்று மாலை திறந்து வைத்தார்.
இவ் வைபவத்தில் கிழக்குமாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாரூக்
முன்னாள் கிழக்குமாகாண சபை உறுப்பினர் கே.எல்.எம்.பரீட் காத்தான்குடி நகர
சபை உறுப்பினர்களான எம்.எஸ்.எம்.ஷியாட்இ அலி ஸப்ரிஇ பாகிர்இ ஜம்மியதுல்
உலமா சபையின் காத்தான்குடி கிளைத் தலைவர் மௌலவி அலியார்(பலாஹி),பொருளாதார
அபிவிருத்திப் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹவின் ஊடக இணைப்பாளர்
எம்.எஸ்.எம்.சஜி உள்ளிட்ட ஊரின் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டமை
குறிப்பிடத்தக்கது.


0 கருத்துகள்: