கடந்த திங்கட்கிழமையன்று ஓட்டமாவடியைச் சேர்ந்த மாணவியொருவருடன்
காத்தான்குடி நகர சபை ஆளும் கட்சி உறுப்பினர் எச்.எம்.எம்.பாக்கீர்
ஆசிரியர் தவறாக நடக்க முற்பட்டதாகவும் அந்த மாணவியை துஷ்பிரயோகம் செய்ய
முற்பட்டதாகவும் நகர சபை உறுப்பினர் மீது காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில்
முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த விடயம் தொடர்பில் காத்தான்குடி நகர சபை உறுப்பினர் எச்.எம்.எம்.பாக்கீர் ஆசிரியரை எமது செய்தியாளர் தொலை பேசியில் தொடர்பு கொண்டு கேட்ட போது கடந்த திங்கட்கிழமையன்று ஓட்டமாவடியைச் சேர்ந்த மாணவியொருவருடன் நான் தவறாக நடக்க முற்பட்டதாகவும் அந்த மாணவியை துஷ்பிரயோகம் செய்ய முற்பட்டதாகவும் என் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பில் நான் மட்டக்களப்பு-காத்தான்குடி முகைதீன் மெத்தை பெரிய ஜும்ஆ பள்ளிவாயலில் சத்தியம் செய்யவுள்ளேன் என காத்தான்குடி நகர சபை உறுப்பினரும் ஆசிரியருமான எச்.எம்.எம்.பாக்கீர் ஆசிரியர் தெரிவித்தார்.
குறித்த விடயம் தொடர்பாக அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்..,
அல்லாஹ்மீது ஆணையாக நான் குறித்த மாணவியை எந்த தவறான எண்ணத்துடன் எனது காரில் அழைத்துச் செல்லவில்லை எதற்காக நான் அழைத்துச் சென்றேன் என்பதை விரைவில் ஊடகங்களின் மூலம் பகிரங்க அறிக்கையாக வெளியிடவுள்ளேன் எனவும் குறிப்பிட்டார்.
அல்லாஹ்மீது ஆணையாக நான் அம் மாணவியுடன் தவறாக நடந்து கொள்ளவில்லை எனவும் என் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றசாட்டு தொடர்பில் காத்தான்குடி முகைதீன் மெத்தை பெரிய ஜும்ஆ பள்ளிவாயலில் சத்தியம் செய்யவுள்ளேன் எனவும் பாக்கீர் ஆசிரியர் மேலும் தெரிவித்தார்.
என்னை திட்டமிட்டு சிலர் அவமானப்படுத்தி வருகின்றனர் எனவும் நான் ஆயிரக்கணக்கான மாணவிகளுக்கு பல வருடங்களாக கல்வி கற்றுக் கொடுத்துள்ளேன். அதில் ஒரு மாணவியாவது என்னை மோசம் என்று இதுவரை சொல்லியுள்ளனரா? என்றும் நான் கேட்க விரும்புகின்றேன் எனவும் குறிப்பிட்டார்.
இதே வேளை துஷ்பிரயோகம் செய்ய முற்பட்டதாக கூறப்படும் மாணவி தற்போது மட்டக்களப்பு போதனா வைத்திய சாலையில் பரீசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது

0 கருத்துகள்: