காத்தான்குடி நகர சபை உறுப்பினரும் பிரபல பொருளியல் பாட ஆசிரியருமான எச்.எம்.எம்.பாக்கீர்
என்பவர் மாணவியொருவரை பாலியல் சேஷ்டை செய்ய முயற்சித்ததாக அம் மாணவி
காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் இன்று முறைப்பாடு செய்துள்ளதாக
காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.
ஓட்டமாவடியைச் சேர்ந்த குறித்த மாணவி காத்தான்குடியிலுள்ள பாக்கீர் ஆசிரியரின் மதினியின் வீட்டில் தங்கியிருந்து கல்வி கற்றுவந்துள்ளார்.
இன்றை தினம் இம் மாணவி பாக்கீர் ஆசியரின் தனியார் கல்வி நிலையத்திற்கு கல்வி கற்க சென்ற போது அம் மாணவியை பாக்கீர் ஆசிரியர் தனது காரில் கல்முனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
காரில் பின் ஆசனத்தில் இருந்து சென்ற இம் மாணவியை முன்னால் வந்து அமருமாறு வற்புறுத்தவே குறித்த மாணவி முன் ஆசனத்தில் வந்து அமர்ந்துள்ளார். அவ் வேளை இம் மாணவியுடன் பாலியல் ஷேட்டை செய்ய முற்பட்ட வேளை மாணவி இடம் கொடுக்கவில்லையென பொலிசாரிடம் மாணவி தெரிவித்துள்ளார்.
கல்முனைக்கு சென்று விட்டு மீள காத்தான்குடிக்கு திரும்பிக் கொண்டிருந்த போது இதே வாறு இம் மாணவியை முன் ஆசனத்தில் அமர்த்தி துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்துள்ளார்.
இந்த மாணவி காரை விட்டு பாயப் போவதாக எச்சரித்தவுடன் புதுக்குடியிருப்பு எனுமிடத்தில் காரை நிறுத்தியுள்ளார்.
காரை விட்டு இறங்கிய இம் மாணவி தனிமையில் அழுது கொண்டு புதுக்குடியிருப்பு வீதியினால் செல்வதை அவதானித்த அந்த வழியால் சென்ற வெளியூரைச் சேர்ந்த சிலர் குறித்த மாணவியை அணுகி விடயத்தை கேட்டுள்ளனர்.
அவ்வேளை பாக்கீர் ஆசிரியர் குறித்து அந்த வெளியூர் வாசிகளிடம் இது எங்களின் குடும்ப பிரச்சினை இது மருமகள் என்று கூறியவுடன் அந்த மாணவி இல்லை, இவரை போகச் சொல்லுங்கள் என இவர் என்னை துஷ்பிரயோகம் செய்ய முனைகின்றார் என கூறியுள்ளார்.
இதையடுத்து இம் மாணவியை சம்மேளனத்திற்கு கொண்டு வந்த இவர்கள் பின்னர் இம் மாணவி தங்கியிருந்த காத்தான்குடியிலுள்ள அவ் வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
பின்னர் விடயம் பொலிசாருக்கு தெரியப் படுத்தியதையடுத்து இம் மாணவி தங்கியிருந்த வீட்டுக்கு வந்த பொலிசார் இம் மாணவியை காத்தான்குடி பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
குறித்த மாணவி மேலே குறிப்பிட்டுள்ள தனது வாக்கு மூலத்தை பொலிசருக்கு தெரிவித்துள்ளதுடன் தன்னை பாக்கீர் ஆசிரியர் பாலியல் சேஷ்டை செய்ய முற்பட்டதாகவும் முறைப்பாடு செய்துள்ளார்.
இச் சம்பவம் தொடர்பாக காத்தான்குடி பொலிசார் விசாரணை செய்து வருவதுடன் பொலிசார் குறித்த மாணவி காரை விட்டு இறங்கிய அந்த இடத்தையும் மாணவி மற்றும் மாணவியின் தாயுடன் சென்று பார்வையிட்டனர்.
இதுதொடர்பாக பொலிசார் தொடர்ந்து விசாரணைகளை நடாத்தி வருவதாகவும் காத்தான்குடி பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

0 கருத்துகள்: