டில்லியில், ஐந்து வயது சிறுமியை, நான்கு நாட்களாக, வீட்டுக்குள் அடைத்து வைத்து, பாலியல் பலாத்காரம் செய்த கொடியவனை, போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால், அதிர்ச்சி அடைந்துள்ள டில்லி மக்கள், நேற்று போராட்டத்தில் இறங்கியதால், பரபரப்பு ஏற்பட்டது.

டில்லி, காந்தி நகர் பகுதியில் வசிக்கும், ஐந்து வயது சிறுமி, நான்கு நாட்களுக்கு முன், விளையாடச் சென்றார். பக்கத்து வீட்டில் வசிக்கும் ஒரு நபர், அந்த சிறுமியை கடத்திச் சென்று, தன் வீட்டில் அடைத்து வைத்தான்.அந்த சிறுமியை, நான்கு நாட்களாக, பாலியல் பலாத்காரம் செய்து, கொடுமைப் படுத்தினான். சிறுமியை காணாமல், அவளது பெற்றோர், போலீசாரிடம் புகார் செய்ததோடு, டில்லி முழுவதும், தேடியும் வந்தனர்.இந்நிலையில், பக்கத்து வீட்டில், சிறுமி அடைத்து வைக்கப்பட்டிருப்பதை, அருகில் உள்ளவர்கள், கண்டுபிடித்து, நேற்று மீட்டனர். சிறுமியை துன்புறுத்திய நபர், தப்பி ஓடி விட்டான். தொடர்ந்து, துன்புறுத்தலுக்கு ஆளானதால், அந்த சிறுமியின் உடல் நிலை, கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.ஆபத்தான நிலையில், சுவாமி தயானந்த் மருத்துவமனையில், நேற்று காலை சிறுமி அனுமதிக்கப்பட்டாள். இந்த கொடூர சம்பவத்தால், ஆத்திரமடைந்த, அந்த பகுதி மக்கள், சிறுமி அனுமதிக்கப்பட்ட, மருத்துவமனை முன் திரண்டு, போராட்டத்தில் ஈடுபட்டனர்; இந்த சம்பவத்தால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், "சிறுமியை பாலியல் பலாத்கரம் செய்த நபர், 22 வயது இளைஞர். அவரை தேடி வருகிறோம். விரைவில் கண்டு பிடித்து விடுவோம்' என்றனர்.

அரவிந்த் கெஜ்ரிவாலின், ஏழை மக்கள் கட்சியை சேர்ந்தவர்கள், "சிறுமி சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனையில், குறைந்த வசதிகளே உள்ளன. எனவே, சிறுமியை, எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்ற வேண்டும்' என, டில்லி முதல்வர், ஷீலா தீட்ஷித்துக்கு கடிதம் எழுதினர். இதையடுத்து, டில்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு, நேற்று மாலை சிறுமி மாற்றப்பட்டார்.

கதறல்:

சிறுமியின் தந்தை கூறியதாவது:என் மகள், காணாமல் போனதுமே, போலீசாரிடம் புகார் அளித்தோம். அவர்கள், அலட்சியப்படுத்தினர். எங்கள் வீட்டுக்கு அருகிலேயே, என் மகளை, அந்த கொடியவன் அடைத்து வைத்திருந்துள்ளான். போலீசார், அங்கு நன்றாக தேடியிருந்தால், என் மகளை, முன் கூட்டியே கண்டு பிடித்திருக்கலாம். என் மகள், மீட்கப்பட்டவுடன், தகவல் அறிந்து, வந்த போலீசார், 2, 000 ரூபாய் தருவதாகவும், இந்த விஷயம் பற்றி, யாரிடமும், மூச்சு விட வேண்டாம் என்றும், கூறினர்.இவ்வாறு, சிறுமியின் தந்தை கூறினார்.

சிறுமிக்கு முதலில் சிகிச்சைக்கு அளித்த, டாக்டர், ஆர்.கே.பன்சால் கூறியதாவது: இன்னும், 48 மணி நேரம் கடந்தால் தான், சிறுமியின் நிலை குறித்து, உறுதியாக கூற முடியும். உதடு, மார்பு, கன்னங்கள், கழுத்து உள்ளிட்ட, அனைத்து பகுதிகளிலும், கடுமையான காயங்கள் உள்ளன. ஓரளவு தான், சுய நினைவு உள்ளது.சிறுமியின் உடலில் இருந்து, மெழுகு வர்த்திகள், சிறிய பாட்டில் ஆகியவை எடுக்கப்பட்டன. நான்கு நாட்களாக, சிறுமிக்கு, உணவு, தண்ணீர் ஆகியவை வழங்கப்படவில்லை என்றும் தெரிய வந்துள்ளது.இவ்வாறு, டாக்டர், ஆர்.கே.பன்சால் கூறினார்.

இளம் பெண்ணுக்கு "பளார்': போலீஸ் அதிகாரி "சஸ்பெண்ட்':

சிறுமியை பார்ப்பதற்காக, அவர் முதலில் அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனைக்கு, டில்லி மாநில காங்., நிர்வாகிகள், சந்தீப் தீட்சித், வாலியா ஆகியோர், நேற்று சென்றனர். அங்கு திரண்டிருந்த, இளம் பெண்கள் சிலர், அவர்களை முற்றுகையிட்டு, கோஷம் எழுப்பினர். இதையடுத்து, போலீசாருக்கும், இளம் பெண்களுக்கும் இடையே, மோதல் ஏற்பட்டது.ஆத்திரமடைந்த, உதவி போலீஸ் கமிஷனர், பானிசிங் அகல்வா, ஒரு இளம் பெண்ணை, கன்னத்தில் சரமாரியாக அறைத்து, தள்ளி விட்டார். இந்த சம்பவம், அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது, இளம் பெண்ணை அறைந்த, உதவி கமிஷனர், சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

5 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை பிரதமர் வருத்தம் :

டில்லியில், ஐந்து வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, ஆபத்தான நிலையில், மருத்துவமனையில் சிசிச்சைப் பெற்று வருகிறார். இச் சம்பவம் கேள்விப்பட்டதும், ஆழ்ந்த கவலை அடைந்துள்ளதாக, பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, பிரதமர் அலுவலகம் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:டில்லியில், ஐந்து வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, துன்புறுத்தப்பட்டது குறித்து கேள்விப்பட்ட பிரதமர் மன்மோகன் சிங், ஆழ்ந்த வருத்தம் அடைந்துள்ளார்.இந்த அவமான செயலுக்கு காரணமானவர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கும் படியும், போராட்டம் நடத்திய பெண்கள் மீது, தாக்குதல் நடத்திய போலீசார் மீது, கடும் நடவடிக்கை எடுக்கும் படியும், டில்லி லெப்டினன்ட் கவர்னரை கேட்டுக்கொண்டுள்ளார்.மேலும், மருத்துவமனையில் சிகிச்சைப் பெறும் சிறுமிக்கு, தேவையான அனைத்து மருத்துவ உதவிகளை அளிக்கும்படியும் கேட்டுக்கொண்டுள்ளார். இவ்வாறு, அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. jaffna muslim

0 கருத்துகள்:

துஆக்கள்

தொழிநுட்ப தகவல்கள்

Live TV

ONISLAAM SMS சேவை

SMS ஐ Active செய்ய


Type F (space) ONISLAAM and Send it to 40404 -on Your Mobile Phone (in Sri Lanka & Others, Click Here) ........... F இடைவெளி ONISLAAM என Type செய்து 40404 ற்கு அனுப்புங்கள் (இலங்கையில்)...... ஏனைய நாட்டவர்கள்--- இங்கு Click செய்யுங்கள்

பார்வையாளர்கள்

பிரமலமானவை

செய்திகள்

உங்கள் IP இலக்கம்

Sign by Danasoft - For Backgrounds and Layouts