
இது தொடர்பில் உண்மை நிலையை அறிய அத தெரண தமிழிணையம் தயா மாஸ்டருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வினவியது,
அதற்கு அவர் பதில் அளிக்கையில்,
"வட மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் எண்ணம் உள்ளது. தேர்தலில் போட்டியிடுவது குறித்து உத்தியோகபூர்வ உறுதியான தகவல் வழங்க இன்னும் ஓரிரு வாரங்கள் செல்லும். இன்னும் உறுதியான முடிவு எடுக்கவில்லை." என்று தெரிவித்தார்.
எதிர்வரும் செப்டெம்பர் மாதம் வட மாகாண சபைத் தேர்தல் நடைபெறும் என அரசாங்கம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
(அத தெரண - தமிழ்)
0 கருத்துகள்: