அணிசேரா கொள்கையின் அடிப்படையில் இலங்கைக்கும், வியாட்நாமுக்கும் இடையில் நல்லுறவு நிலவுவதாகவும் சமூக, பொருளாதார அபிவிருத்தி, வறுமை ஒழிப்புச் செயற்திட்டங்கள், சட்டத்துறை சீர்திருத்தங்கள் போன்ற துறைகளில் இரு நாடுகளும் சிறப்பாக ஒத்துழைத்து வருவதாகவும் நீதியமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

அங்கு இருதரப்பு புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றில் கைச்சாத்திட்ட பின்னர் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

வியட்நாமுக்கு ஐந்து நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ள நீதியமைச்சர் ஹக்கீம் அங்கு பல முக்கிய நிகழ்வுகளில் கலந்து கொண்டார்.

சட்டம் மற்றும் நீதித்துறை சார்ந்த புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றில் இலங்கை நீதியமைச்சர், வியட்நாம் நீதியமைச்சர் ஹா ஹ_ங் ஷொங் ஆகியோர் கைச்சாத்திட்டனர். இந்த உடன்படிக்கையை மேற்கொள்வதற்கான அங்கீகாரத்தை நீதியமைச்சர் ஹக்கீமுக்கு கடந்தவாரம் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கிருந்தது. பிரஸ்தாப உடன்படிக்கையை வெற்றிகரமாக செயல்படுத்துவதற்கான வழிவகைகளை அமைச்சர்கள் இருவரும், இரு நாடுகளையும் சேர்ந்த உயர் அதிகாரிகளும் பரிசீலித்தனர்.

தற்பொழுது இலங்கைக்கும், வியட்நாமுக்கும் இடையிலான ராஜதந்திர ரீதியான உறவுகள் மிகவும் சுமூகமாகவும், சிறப்பாகவும் இருந்து வருவதாக குறிப்பிட்ட நீதியமைச்சர் ஹக்கீம் இரு நாடுகளுக்கும் இடையிலான தூதுக்குழுக்கள் அடிக்கடி சந்தித்து, கலந்துரையாடல்களை நடாத்தி வருவதாகவும், அண்மையில் இலங்கை அமைச்சர்கள் ஏழு பேர் வியட்நாமுக்கு விஜயம் செய்திருப்பதாகவும், இரண்டு வர்த்தக தூதுக்குழுக்களும் அண்மையில் அங்கு சென்று வந்ததாகவும் கூறினார்.

முப்பது ஆண்டுகால உள்நாட்டு யுத்தம் முடிவடைந்துள்ள சூழ்நிலையில் பல்வேறு துறைகளில் இலங்கை துரித கதியில் அபிவிருத்தியடைந்து வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

பிராந்தியத்திற்குள்ளும், அதற்கு அப்பாலும் ஒன்றிணைந்து செயலாற்றுவதற்கான வாய்ப்புகள் பற்றி தமது அரசாங்கம் கூடுதல் கரிசனை செலுத்தி வருவதாக சுட்டிக்காட்டிய வியட்நாமிய நீதியமைச்சர் ஹா ஹ_ங் ஷொங், அரசில் பரந்த அளவிலான மக்கள் பங்குபற்றுதலையும், சமூக, பொருளாதார அபிவிருத்தியையும் குறிக்கோள்களாகக் கொண்டும், பூகோள ரீதியில் ஏற்பட்டு வரும் மாற்றங்களை அனுசரித்தும் வியட்நாம் தனது அரசியல் அமைப்பில் உரிய திருத்தங்களை மேற்கொள்ளவுள்ளதாகவும் அந்த நோக்கத்திற்காக தேசிய தேர்தல் மன்றமொன்று இவ்வாண்டின் இறுதிப் பகுதியில் அமைக்கப்படவுள்ளதாகவும் கூறினார்.

இவ்வாண்டு இறுதிக்குள் கொழும்பில் செயற்படவுள்ள சர்வதேச நடுத்தீர்ப்பு மையத்தின் ஊடாக வெவ்வேறு நாடுகளில் ஏற்படக் கூடிய வர்த்தகம் மற்றும் தொழிற்துறை சம்பந்தப்பட்ட பிணக்குகளுக்கு உரிய தீர்வுகளை காண்பது மிகவும் இலகுவாகவும், பயனுள்ளதாகவும் அமையும் என்பதை வியம்நாமிய அமைச்சர்களுக்கும், பிரதானிகளுக்கும் எடுத்துக் கூறிய அமைச்சர் ஹக்கீம் அதில் ஈடுபாடு காட்டுமாறு வேண்டுகோள் விடுத்தார்.

வியட்நாமின் சட்டதிட்டங்களின் படி உள்நாட்டுத் தரப்புகளே நடுத்தீர்ப்பு விஷயத்தில் ஈடுபடலாம் என்ற நியதி தொடர்ந்தும் பின்பற்றப்படுவதாகவும், வெளிநாட்டு வர்த்தக மற்றும் தொழில் விவகாரங்கள் தொடர்பான சர்ச்சைகள் தலைதூக்கும் போது அவற்றிற்கு நீதிமன்றங்களின் ஊடாக தீர்வு காணப்படுவதாகவும் கூறிய வியட்நாமிய அமைச்சர், இலங்கையின் நீதி அமைச்சர் வேண்டுகோள் விடுத்த பிரகாரம் கொழும்பில் அமையவுள்ள உத்தேச நடுத்தீர்ப்பு மையம் வெற்றிகரமாக செயல்படுமானால், வியட்நாமில் ஏற்படக் கூடிய அவ்வாறான பிணக்குகளுக்கு கொழும்பில் அமையவுள்ள சர்வதேச நடுத்தீர்ப்பு மையத்தின் உதவியை நாடக்கூடிய தேவைகுறித்து சீர்தூக்கிப் பார்க்கக் கூடிய வாய்ப்பு உண்டு என்றும் குறிப்பிட்டார்.

முன்னதாக வியட்நாமின் வின்புச் பிராந்தியத்தின் தேசிய பேரவையின் பிரதி நிரந்தரச் செயலாளரின் தலைமையிலான தூதுக்குழுவினருக்கும், அமைச்சர் ஹக்கீமுக்கும் இடையிலான சந்திப்பொன்றும் இடம்பெற்றது.

இலங்கை நீதியமைச்சின் மேலதிகச் செயலாளர் குமார் ஏகரத்ன, அமைச்சரின் சட்ட ஆலோசகர் எம்.எச்.எம். சல்மான், வியட்நாமில் உள்ள இலங்கைத் தூதுவர் இவான் அமரசிங்க, ஆகியோரும் நிகழ்வுகளில் பங்குபற்றினர்.

0 கருத்துகள்:

துஆக்கள்

தொழிநுட்ப தகவல்கள்

Live TV

ONISLAAM SMS சேவை

SMS ஐ Active செய்ய


Type F (space) ONISLAAM and Send it to 40404 -on Your Mobile Phone (in Sri Lanka & Others, Click Here) ........... F இடைவெளி ONISLAAM என Type செய்து 40404 ற்கு அனுப்புங்கள் (இலங்கையில்)...... ஏனைய நாட்டவர்கள்--- இங்கு Click செய்யுங்கள்

பார்வையாளர்கள்

பிரமலமானவை

செய்திகள்

உங்கள் IP இலக்கம்

Sign by Danasoft - For Backgrounds and Layouts