
அக்குரஸ்ஸ
நகரத்திலுள்ள பங்கம வீதியில் குண்டு வெடிப்பு சம்பவம் ஒன்று
இடம்பெற்றுள்ளது. இனிப்பு பண்டங்கள் விற்பனை செய்யும் கடையிலேயே இந்த
சம்பவம் இன்று திங்கட்கிழமை காலை இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் கடைக்கு வெளியில் நின்றுக்கொண்டிருந்த நபரே
காயமடைந்துள்ளதாக பொலிஸார்
தெரிவித்தனர். காயமடைந்த நபர் வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த வெடிப்புச் சம்பவத்திற்கான காரணம் உடனடியாக கண்டறியப்படாத
நிலையில் கைக்குண்டொன்று வெடித்திருக்கலாம் என்று சந்தேகிக்கின்ற பொலிஸார்
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பட உதவி :லங்காதீப
0 கருத்துகள்: