
குறித்த குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள ஆசிரியர் சட்டத்தரணி ஒருவர் ஊடாக நேற்று (10) மாலை கல்கிரியாகம பொலிஸில் சரணடைந்துள்ளார்.
பாடசாலை முடிந்ததும் மாலை வகுப்பு எனக்கூறி தனது வகுப்பறையில் வைத்து குறித்த ஆசிரியர் மாணவிகளை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளார்.
இந்த விடயம் குறித்து வெளியில் யாருக்கும் சொல்லக்கூடாதென ஆசிரியர் மாணவிகளை மிரட்டியும் வந்துள்ளார்.
மாலை வகுப்பு முடிந்து வீட்டுக்கு திரும்பிய மாணவி ஒருவரின் வெள்ளை சட்டையில் இரத்தக்கரை காணப்பட்டுள்ளது.
இதனை அவதானித்த தாய் அவரிடம் கேள்வி எழுப்பியதை அடுத்து உண்மை அம்பலமாகியது.
இதனையடுத்து பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்கப்பட்டது.
இந்த நாசகார சம்பவத்துடன் தொடர்புடைய ஆசிரியர் இரண்டு பிள்ளைகளின் தந்தை என தெரிவிக்கப்படுகிறது.
நீண்ட காலமாக இவர் மாணவிகளை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தி வந்துள்ளார் என தெரியவந்துள்ளது.
(அத தெரண - தமிழ்)
0 கருத்துகள்: