டெஹ்ரான்:சிரியாவின் தலைநகரான டமாஸ்கஸ் மீது தாக்குதல் நடத்தும் இஸ்ரேலுக்கு எதிராக அரபுலகம் ஒன்றிணையவேண்டும்
என்று ஈரான் கோரிக்கை விடுத்துள்ளது. சிரியா ராணுவத்திற்கு பயிற்சி அளிக்க
தாங்கள் தயார் என்றும் ஈரான் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ராமின்
மெஹ்மான் பெரஸ் கூறியுள்ளார்.
லெபனானில் ஹிஸ்புல்லாஹ்விற்கு ஈரான் தயாரிப்பு ஏவுகணைகளுடன் சென்று கொண்டிருந்த கப்பல் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுவதை ஈரான் மறுத்துள்ளது. ஹிஸ்புல்லாஹ்விற்கு தாங்கள் ஆயுதங்களை அனுப்புவதில்லை என்று பெரஸ் கூறினார்.
முஸ்லிம் நாடு என்ற நிலையில் வெளிநாட்டு ராணுவ தலையீட்டில் இருந்து சிரியாவை காப்பாற்ற தயார் என்று ஈரான் தரைப்படை கமாண்டர் அஹ்மத் ரஸா பவுர்தஸ்தான் அறிவித்துள்ளார்.

0 கருத்துகள்: