டமாஸ்கஸ்/கெய்ரோ:அதிபர் பஸ்ஸாருல் ஆஸாதின் சர்வாதிகார ஆட்சியை எதிர்த்து துவங்கிய ஜனநாயக போராட்டம் உள்நாட்டுப்போராக மாறிய சிரியாவில் இஸ்ரேல் தொடர்ந்து வான்வழிதாக்குதலை நடத்தி வருகிறது.தலைநகரான டமாஸ்கஸின் அண்மைப்பகுதியில் உள்ள ஜம்ரயா விஞ்ஞான ஆய்வுமையத்தின் மீது நேற்று அதிகாலை இஸ்ரேலின் ஏவுகணைகள் தாக்குதல் நடத்தியதாக சிரியாவின் அதிகாரப்பூர்வ தொலைக்காட்சி சானல் தெரிவிக்கிறது.

ஆனால், தாக்குதலில் உயிர் சேதம் குறித்து தகவல் இல்லை.ஜம்ரயா விஞ்ஞான ஆய்வு மையத்தின் மீது கடந்த ஜனவரி மாதமும் இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதலை நடத்தியது.நேற்று அதிகாலை ஜம்ரயா விஞ்ஞான ஆய்வுமையத்தின் மீது நடத்தியதன் விளைவாக எழுந்த பிரம்மாண்டமான நெருப்பு ஜுவாலையின் காட்சிகளை மனித உரிமை ஆர்வலர்கள் இணையதளங்களில் வெளியிட்டுள்ளனர்.தாக்குதலைத் தொடர்ந்து டமாஸ்கஸில் ஒன்றுக்கும் மேற்பட்ட தடவை பயங்கர குண்டுவெடிப்புச் சத்தம் கேட்டதாக அல்ஜஸீரா தொலைக்காட்சி சானல் கூறுகிறது.சிரியாவை குறிவைத்து இஸ்ரேல் வெள்ளிக்கிழமை நடத்திய வான்வழித்தாக்குதல் உறுதிச்ச்செய்யப்பட்ட நிலையில் நேற்று மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.அதேவேளையில், லெபனானில் உள்ள ஹிஸ்புல்லாஹ் போராளி இயக்கத்திற்கு ஈரான் தயாரிப்பு ஏவுகணைகளை கொண்டு சென்ற கப்பல் மீது தாக்குதல் நடத்தபப்ட்டதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.இதற்கு ஈரான் மறுப்பு தெரிவித்துள்ளது.மூன்று தினங்களில் நிகழ்ந்த இரண்டு தாக்குதல்கள், சிரியாவின் உள்நாட்டுப்போரில் இஸ்ரேலும் பங்காளியாகிறது என்பதற்கான அறிகுறியாகும்.இத்தாக்குதலை கண்டித்த சிரியா அரசு, அரசுக்கு எதிராக போராடும் குழுக்களுக்கு இஸ்ரேல் நேரடியாக ஆதரவு அளிக்கிறது என்பதன் உதாரணம் என்று குற்றம் சாட்டியுள்ளது.பெரும் சேதங்களை விளைவித்துள்ள இஸ்ரேலின் தாக்குதலுக்கு எதிராக ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் புகார் அளித்திருப்பதாக சிரியாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவிக்கிறது.தாக்குதல் நடத்தியது தொடர்பாக இஸ்ரேல் உறுதிச்செய்யவில்லை.இது தொடர்பான செய்திகளுக்கு பதில் அளிக்க முடியாது என்று இஸ்ரேல் செய்தி தொடர்பாளர் கூறுகிறார்.ஆனால், பெயர் வெளியிட விரும்பாத அதிகாரிகளை மேற்கோள் காட்டி சிரியாவின் மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதல் அரசுக்கு தெரிந்தே நிகழ்த்தப்பட்டது என்று எ.எஃப்.பி செய்தி நிறுவனம் கூறுகிறது.சிரியா மீது தாக்குதல் நடத்த இஸ்ரேலுக்கு அதிகாரம் உண்டு என்று நேற்று முன் தினம் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா கூறியிருந்தார்.

சிரியா ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இரசாயன ஆயுதங்கள் ஹிஸ்புல்லாஹ் வசம் செல்வதை தடைவதற்கே இஸ்ரேல் நடத்துகிறது என்றாலும் சிரியாவை ராணுவ ரீதியாக தகர்க்கவேண்டும் என்பதே இஸ்ரேலின் திட்டம் என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.சிரியா மீது இஸ்ரேல் நடத்திய அடாவடி தாக்குதலை அரபு லீக், எகிப்து, ஈரான் ஆகியன கண்டித்துள்ளன.உள்நாட்டு பிரச்சனைகள் வேட்டையாடும் சிரியாவின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல் ஆபத்தான சட்ட மீறலாகும் என்று கூறிய அரபு லீக் செய்தி தொடர்பாளர், இஸ்ரேல் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று ஐ.ந பாதுகாப்பு கவுன்சிலை வலியுறுத்தியுள்ளார்.இஸ்ரேலின் சிரியா மீதான தாக்குதல் சர்வதேச சட்டங்களை மீறுவதாகும் என்று எகிப்து அதிபர் முஹம்மது முர்ஸி கண்டனம் தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்:

துஆக்கள்

தொழிநுட்ப தகவல்கள்

Live TV

ONISLAAM SMS சேவை

SMS ஐ Active செய்ய


Type F (space) ONISLAAM and Send it to 40404 -on Your Mobile Phone (in Sri Lanka & Others, Click Here) ........... F இடைவெளி ONISLAAM என Type செய்து 40404 ற்கு அனுப்புங்கள் (இலங்கையில்)...... ஏனைய நாட்டவர்கள்--- இங்கு Click செய்யுங்கள்

பார்வையாளர்கள்

பிரமலமானவை

செய்திகள்

உங்கள் IP இலக்கம்

Sign by Danasoft - For Backgrounds and Layouts