தேசிய
சேமிப்பு வங்கியின் நீர்கொழும்பு கிளையில் அடகு வைக்கப்பட்ட நகையை அடகு
வைத்த பெண் மீட்டபோது அதில் ஒரு நகை போலியாக இருப்பதைக் கண்டு நீர்கொழும்பு
பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
நீர்;கொழும்பு கடோல்கலே பிரதேசத்தைச் சேர்ந்த ஐவன் என்ற பெண்னே பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தவராவார்.
தனது பிள்ளையின் இரண்டு பவுண் கொண்ட தங்கச் சங்கிலி மற்றும் “பிரேஸ்லட்”
என்பவைகளை குறித்த பெண் மீட்டு வீடு வந்த போது அதில் “பிரேஸ்லட்” போலியாக
இருப்பதை அவரது கணவர் கண்டுள்ளார்.
பின்னர் இது தொடர்பாக குறித்த
வங்கியில் எழுத்து மூலம் முறைப்பாடு செய்ததுடன். நீர்கொழும்பு பொலிஸ்
நிலையத்திலும் அவர்கள் கடந்த திங்கட்கிழமை முறைப்பாடு செய்துள்ளனர்.
இது தொடர்பாக குறித்த பெண்ணின் கணவர் தெரிவிக்கையில்,
தேசிய சேமிப்பு வங்கியின் நீர்கொழும்பு கிளையில் பத்து இலட்சம் ரூபா
பெறுமதியான நகைகளை எனது மனைவி கடந்த ஒரு வருட காலத்தில் அடகு
வைத்திருந்தார். அதில் 5 இலட்சம் ரூபா பெறுமதியான நகைகளை நாங்கள் இது வரை
மீட்டுள்ளளோம்.
கடந்த திங்கட்கிழமை எனது மகளின் இரண்டு பவுண்
கொண்ட தங்கச் சங்கிலி மற்றும் “பிரேஸ்லட்” என்பவைகளை மீட்டு வீடு வந்த
போது, அதில் “பிரேஸ்லட்” போலியாக இருப்பதை நான் கண்டு படித்தேன் இது அந்த
நகையை வாங்கிய நகை கடையிலும் உறுதிப்படுத்தப்பட்டது. இது தொடர்பாக
வங்கியில் எழுத்து மூலமாக முறைப்பாடு செய்தோம். வங்கியின்
தலைமையகத்திற்கும் இது தொடர்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய தினமும்
வங்கிக்கு அழைத்து எம்மை விசாரித்தனர் என்றார்.
0 கருத்துகள்: