முன்னாள் கொழும்பு மாநகர மேயர் ஆஸாத் சாலி அவர்களின் கைதை நேர் சிந்தனை உள்ள அனைவரும் மிகவும் வன்மையாக கண்டிக்க வேண்டும். தீவிரவாத முன்தடை சட்டத்தின் மூலம் இன முரண்பாட்டை தூண்டினார் என்ற குற்றச்ச்சாட்டின் மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ள இவரது கைது யுத்த கால சட்டங்களை யுத்தமற்ற காலப்பகுதியில் தமது அரசியல் எதிரிகளை வேட்டையாட இந்த அரசு பயன்படுத்தி வருவதை இன்னொருமுறை உறுதி செய்துள்ளது.


இந்த நாட்டின் சட்டம் ஒழுங்கு பேணப்படும் நிலையின் அவலத்தை நோக்கும் ஒருவருக்கு ஆஸாத் சாலி அவர்களின் கைது ஒரு அதிர்ச்சியான சம்பவமாக இருக்க முடியாது. ஆஸாத் சாலி அவர்களின் நடவடிக்கைகள் ஒரு இனத்தின் மீது இன்னொரு இனம் வெறுப்பு பிரச்சாரங்களை முன்னெடுக்கும் பட்சத்தில் இந்த நாடு எவ்வாறான பின்விளைவுகளை சந்திக்கும் என்பதற்கு ஒரு முன்னறிவிப்பாகவே நோக்கப்பட வேண்டும்

இனவாத குழுக்கள் இந்த நாட்டின் சமூகமொன்றை இலக்குவைத்து வெறுப்பு பிரச்சாரங்களை முன்னெடுக்கையில், இன்னொரு இன மோதலுக்கு தூபமிடப்படும் போது நாட்டின் அரசு இதனை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றது. இந்த சந்தர்ப்பத்தில் இதற்கு எதிராக குரல் எழுப்பிய ஆஸாத் சாலி நிச்சயமாக பாராட்டப்பட வேண்டியவர் ஆவார். இன வெறுப்பு நடவடிக்கைகளுக்கு எதிராகவும் நாட்டின் ஒற்றுமைக்காகவும் நாம் ஆஸாத் சாலியுடன் கை கோர்க்க வேண்டும். எம்மில் அநேகமானோர் 1983 ஜூலை கலவரம் போன்ற ஒரு விடயத்தை மீண்டும் யாராவது கொண்டு வர முயன்றால் அதை எதிர்ப்போம். ஒரு சர்வாதிகார அரசுக்கு எதிராக தேசப்பற்றுள்ள, இனவெறுப்பு பிரச்சாரங்களை எதிர்க்கின்ற, மதப்பிரிவினைகளை விரும்பாத அனைவரும் அணி திரள வேண்டும். 

ஒரு ஊடகத்துக்கு சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறினார் என்ற குற்றச்சாட்டில் ஆஸாத் சாலி கைது செய்யப்பட்டுள்ள அதேவேளை ஒரு ஆளும் கூட்டணி அரசின் தலைவரை கொலை செய்தார் என குற்றம் சாட்டப்பட்டுள்ள ஒரு ஆளும் கட்சி அரசியல் வாதி பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். இலங்கை மக்கள் இந்த முரண்பாட்டு சம்பவங்களை மற்றும் இவ்வாறு வெறுக்கத்தக்க வெட்கக்கேடான முறைமைகள் மூலம் அரசாள்பவர்களை அவதானித்து வருகிறார்கள்.

கொலைக்குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் போலிஸ் பாதுகாப்புடன் ஜனாதிபதி மாளிகைக்கு கோலாகலமாக வரவேற்கப்படும் அதேவேளை சமாதானத்தை வேண்டும், மக்களை பிரிவினைக்கு தூண்டுவோருக்கு எதிராக குரல் கொடுக்கும் ஒருவர் பயங்கரவாதி என குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்படுகிறார்..

பொதுநலவாய நாடுகளின் தலைவர்களின் மாநாடு இந்த வருட நவம்பரில் இலங்கையில் நடைபெற ஏற்பாடாகி இருக்கும் இந்த வேளையில் உலகின் முழுக்கவனமும் இலங்கை மீது திரும்பியுள்ளது. இந்த நிலையில் நமது அரசு பொதுநலவாய கொள்கைகளான நல்லாட்சி, கருத்தது சுதந்திரம், ஜனநாயகம் மற்றும் சட்ட ஆட்சி என்பவற்றை உள்வாங்க எந்த வித அக்கறையும் காட்டாமை மிகவும் துக்ககரமானது.. இலங்கையின் ஜனநாயகத்தை மேற்குலகம் குறை கூறி வரும் இவ்வேளை தறபோதைய இலங்கை அரசின் நடவடிக்கைகள் எமது நாட்டின் கீர்த்திக்கு மேலும் சேறு பூசுவதாகவே அமைந்துள்ளது.

சுதந்திர்ரத்தை விரும்பும் சகல இலங்கையரையும் இந்த அரசினால் மேற்கொள்ளப்படும் பாரிய அநீதிகளை உணர்ந்து கொள்ளுமாறு நான் கோரிக்கை விடுக்கின்றேன். ஆஸாத் சாலிக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதி ஒரு தனி மனிதருக்கு இழைக்கப்பட்ட அநீதியல்ல. மாறாக இலங்கையர் அனைவரும் ஒன்றாக் வாழ முடியும் என்ற நம்பிக்கைக்கு, இந்த நாட்டில் நீதி பேணப்படும் என்ற நம்பிக்கைக்கு, இலங்கை மீண்டும் ஒரு யுத்தத்துக்கு இன வெறுப்புக்கு உற்படக்கூடாது என்ற எதிர்பார்ப்புக்கு இழைக்கப்பட்ட அநீதியாகும். இந்த நம்பிக்கை மற்றும் எதிர்பார்ப்புகளுக்காக போராடுவது மிகவும் பெறுமதியானது.

0 கருத்துகள்:

துஆக்கள்

தொழிநுட்ப தகவல்கள்

Live TV

ONISLAAM SMS சேவை

SMS ஐ Active செய்ய


Type F (space) ONISLAAM and Send it to 40404 -on Your Mobile Phone (in Sri Lanka & Others, Click Here) ........... F இடைவெளி ONISLAAM என Type செய்து 40404 ற்கு அனுப்புங்கள் (இலங்கையில்)...... ஏனைய நாட்டவர்கள்--- இங்கு Click செய்யுங்கள்

பார்வையாளர்கள்

பிரமலமானவை

செய்திகள்

உங்கள் IP இலக்கம்

Sign by Danasoft - For Backgrounds and Layouts