பதில் சொல்லுமா உலமா சபை?
நீர் இணை கற்பித்தால் உமது நல்லறம் அழிந்து விடும்; நீர் இழப்பை அடைந்தவராவீர். மாறாக, அல்லாஹ்வையே வணங்குவீராக! நன்றி செலுத்துவோரில் ஆவீராக!என்று (முஹம்மதே!) உமக்கும், உமக்கு முன் சென்றோருக்கும் தூதுச் செய்தி அறிவிக்கப்பட்டது. (39: 65>66)
அஸாத் ஸாலி – கடந்த சில நாட்களாக மீடியாக்களில் அடிக்கடி பேசப்படும் மனிதர். இலங்கையில் ஏற்பட்ட இனவாத
சூழலில் இனவாதிகளுக்கு எதிராக அறிக்கை விட்டதின் மூலம் அறியா மக்களின் மனங்களில் இடம் பிடித்த ஒரு அரசியல் புள்ளி.
ஆளும் கட்சியில் இடம் பிடித்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் வாய் மூடி மௌனித்துப் போயிருந்த நேரத்தில் எந்த அரசியல் வாதியாவது வாய் திறக்கமாட்டாரா? என்று ஏங்கிய பொது மக்களின் எண்ணத்திற்கு தீணி போட்டது அஸாத் ஸாலியின் குரல்.
ஆனால்..
அஸாத் ஸாலி என்பவர் யார்? அவருடைய பிண்ணனி என்ன? அனைவரும் மௌனித்துப் போன நேரத்தில் இவர் மாத்திரம் தைரியமாக பேசியதெப்படி? கடும் பிரச்சினை நேரத்தில் எவ்வித நடவடிக்கையும் எடுக்காத அரசு இப்போது அவரை கைது செய்திருப்பது ஏன்? போன்ற கேள்விகள் பதிலில்லாமல் தொக்கி நிற்பதை தவிர்க்க முடியவில்லை. ஆனாலும் அண்மையில் இலங்கை முஸ்லிம் என்ற வலை தளத்தில் படித்த ஒரு ஆக்கம் இவரின் அரசியல் பின்னனியையும், அசாதாரண தைரியத்தின் பின்புலத்தையும் வெளிச்சம் போட்டுக் காட்டியது. – இவர் அரசாங்கத்தின் கைப் பிள்ளை என்பதையும், அரசு எடுக்கும் சினிமாவில் இவர் தான் ஹீரோ என்பதையும்.
குறித்த கட்டுரையை முழுமையாக படிக்க இங்கு க்லிக் செய்யுங்கள்.
இன்று இஸ்லாத்திற்கும், இலங்கை முஸ்லிம்களுக்கும் எதிராக நடந்து வரும் அனைத்துப் பிரச்சினைக்கும் பின்னனியாக இருப்பவர் அஸாத் ஸாலியின் சகோதரர் ரியாஸ் ஸாலி என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. கடந்த பல மாதங்களுக்கு முன்பே இவர் தனது சமுதாய துரோகத்தை வெளிப்படுத்த ஆரம்பித்து விட்டார். லக் பிம நியுஸ் ஆங்கிலப் பத்திரிக்கையில் இலங்கையில் வஹாபிய தீவிரவாதம்என்ற தலைப்பில் பொய்யான கட்டுக் கதையொன்றை ஜோடனை செய்து பரப்பியதின் மூலம் தான் யார் என்பதை உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டினார்.
அண்ணன் காட்டிக் கொடுக்க தம்பி எதிர்த்துப் பேசுவதாக நடிக்கிறார்.. என்னவொரு அருமையான திட்டம்?
இலங்கை முஸ்லிம்களை பரம்பரை முஸ்லிம்கள் புதிய முஸ்லிம்கள் என்று பிரித்துப் பார்க்கும் இனவாதிகளுக்கு மத்தியில் அஸாத் ஸாலியும் ஓர் பரம்பரை முஸ்லிம் (கப்ரு வணங்கி) வட்டத்திற்குள் தான் வருகின்றார். அப்படியானால் அவர் ஏன் இனவாதிகளை எதிர்க்க வேண்டும்? அவருக்கும் இனவாதிகளுக்கும் எவ்வித பிரச்சினையும் இல்லையே?
அண்ணன் இனவாதத்தின் தூண்டுகோளாக இருக்க தம்பி அதற்கெதிரான ஊது குழலாக இருக்கின்றார். தரீக்கா தலைமையை இலங்கையில் உண்டாக்குவதற்கான நன்கு திட்டமிடப்பட்ட காய் நகர்த்தல் ஒன்று நடை பெறுவதை நாம் இதன் மூலம் அவதானிக்க முடிகின்றது.
சரி இப்போது விஷயத்திற்கு வருவோம்.
அஸாத் ஸாலி கைது செய்யப்பட்டு சில நாட்கள் ஆகிவிட்டது. இன்னும் அவர் விடுதலை செய்யப்படவில்லை. நிலைமை இவ்வாறிருக்க அவருடைய குடும்பத்தினரோ அவருடைய விடுதலைக்காக விசேட துஆ பிரார்த்தனைகளில் ஈடுபட்டு வருவதை மீடியாக்களின் மூலம் நாம் கண்டு வருகின்றோம்.
இதன் உச்சகட்டமாக கடந்த 05.05.2013 ஞாயிறு அன்று கொழும்பு கங்காராம விகாரையில் அஸாத் ஸாலியின் விடுதலைக்காக விசேட பூஜை நடை பெற்றது.
இதில் அஸாத் ஸாலியின் மனைவி, மகள் மற்றும் அவருடைய சகோதரர்களின் ஒருவரான ரியாஸ் ஸாலி ஆகியோர் கலந்து கொண்டார்கள். மலர் தட்டை ஏந்திக் கொண்டு புத்தரிடத்தில் மலர் வைத்து பூஜை செய்யும் காட்சிகள் வீடியோ பதிவு பல செய்திச் சேவைகளிலும் வெளிவந்தது.
கீழுள்ள வீடியோவைப் பாருங்கள்.

இதன் மேல் கிலிக் செய்து வீடியோவை பாருங்கள் 
அல்லாஹ்வை மாத்திரம் வணங்க வேண்டியவர்கள் தெவடகஹதர்காவை வழிபட்டு வந்தார்கள். இன்றோ சிலையை வணங்கும் நிலைக்கு சென்றுவிட்டார்கள். இஸ்லாத்தின் பார்வையில் இவர்கள் குப்ர் செய்த காபிர்கள் என்ற நிலையில் இருக்கின்றார்கள். என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
சமூகத்திற்காக குரல் கொடுப்பதாக தன்னை காட்டிக் கொள்ளும் அஸாத் ஸாலியின் குடும்பத்தின் உண்மை நிலை இப்போது தெரிகின்றதா?
முஸ்லிம்களை காட்டிக் கொடுக்கும் காரியத்தில் ரியாஸ் ஸாலி (அஸாத் ஸாலியின் மூத்த சகோதரர்) ஈடுபடுகின்றார்.
பள்ளிகள் தாக்கப்படுவதற்கு எதிராக அஸாத் ஸாலி குரல் எழுப்புகின்றார்.
அவருடைய மகளோ புத்தரிடத்தில் பூஜை செய்கின்றார்.
இது மார்க்க (தரீக்கா) பற்றா? சமூகப்பற்றா? அரசியல் பற்றா?
அல்லாஹ்வின் தீர்ப்பு இதுதான்.
அல்லாஹ் அல்லாதவர்களை யார் வணங்குகின்றார்களோ அவர்களுடைய அனைத்து நன்மைகளையும் அல்லாஹ் அழித்து நரகில் தூக்கி போட்டுவிடுவான்.
நீர் இணை கற்பித்தால் உமது நல்லறம் அழிந்து விடும்; நீர் இழப்பை அடைந்தவராவீர். மாறாக, அல்லாஹ்வையே வணங்குவீராக! நன்றி செலுத்துவோரில் ஆவீராக!என்று (முஹம்மதே!) உமக்கும், உமக்கு முன் சென்றோருக்கும் தூதுச் செய்தி அறிவிக்கப்பட்டது.(39: 65>66)
இதுவே அல்லாஹ்வின் வழி. தனது அடியார்களில் தான் நாடியோரை இதன் மூலம் நேர் வழியில் செலுத்து கிறான். அவர்கள் இணை கற்பித்திருந்தால் அவர்கள் செய்த (நல்ல)வை அவர்களை விட்டும் அழிந்திருக்கும். (6: 88)
அல்லாஹ் மண்ணிக்காத குற்றம் – இணை வைத்தல்.
தனக்கு இணை கற்பிக்கப்படுவதை அல்லாஹ் மன்னிக்க மாட்டான். அதற்குக் கீழ் நிலையில் உள்ள (பாவத்)தை, தான் நாடியோருக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பவர் மிகப் பெரிய பாவத்தையே கற்பனை செய்தார். (4: 48)
தனக்கு இணை கற்பிக்கப்படுவதை அல்லாஹ் மன்னிக்க மாட்டான். இதற்குக் கீழ் நிலையில் உள்ளதை, தான் நாடியோருக்கு அவன் மன்னிப்பான். அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பவர் (உண்மையை விட்டும்) தூரமான வழி கேட்டில் விழுந்து விட்டார். (4: 116)
அல்லாஹ் அல்லாதவர்களை வணங்குபவர்களுக்கு சுவர்க்கம் தடை செய்யப்பட்டுவிட்டது.
மர்யமின் மகன் மஸீஹ் தான் அல்லாஹ்எனக் கூறியவர்கள் (ஏக இறைவனை) மறுத்து விட்டனர்.! இஸ்ராயீலின் மக்களே! என் இறைவனும், உங்கள் இறைவனுமாகிய அல்லாஹ்வை வணங்குங்கள்! அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்போருக்கு சொர்க்கத்தை அல்லாஹ் தடை செய்து விட்டான். அவர்கள் சென்றடையும் இடம் நரகம். அநீதி இழைத்தோருக்கு எந்த உதவியாளர்களும் இல்லைஎன்றே மஸீஹ் கூறினார். (5: 72)
அஷ்ரபுக்கு எதிராக பத்வா வழங்கிய உலமா சபை அஸாத் ஸாலியின் குடும்ப விஷயத்தில் மௌனம் காப்பது ஏன்?
தீக வாவி பிரச்சினை நேரத்தில் புத்த சிலையிடத்தில் மலர் தட்டோடு அஷ்ரப் போனார். இது தெளிவான ஷிர்க் – இறைவனுக்கு இணை வைக்கும் காரியம் – இப்படி அஷ்ரப் செய்தார் என்பதற்காக ஜம்மிய்யதுல் உலமா சபையின் அன்றைய தலைவராக இருந்த ரியாழ் மௌலவி அவர்கள் அஷ்ரப் முர்த்தத் – மதம் மாறியவர் என்று பத்வா வழங்கினார்.
அன்று அஷ்ரப் செய்ததை இன்று அஸாத் ஸாலியின் குடும்பம் செய்திருக்கின்றது. இதற்கு ஜம்மிய்யதுல் உலமாவின் தீர்ப்பு என்ன?
அஸாத் ஸாலியை தண்டனையில் இருந்து காப்பாற்றுவதற்கு அரசாங்கத்திற்கு கடிதம் எழுதியவர்கள், அஸாத் ஸாலியின் குடும்பத்தை நரகத்தில் இருந்து காப்பாற்ற என்ன செய்யப் போகின்றார்கள்?
பொறுத்திருந்து பார்ப்போம்.
இஸ்லாத்தின் அடிப்படையில் பத்வா கொடுப்பார்களா? அல்லது சமுதாய ஒற்றுமையின் பேரில் மார்க்கத்தை மறைப்பார்களா?

நன்றி rasminmisc.com

0 கருத்துகள்:

துஆக்கள்

தொழிநுட்ப தகவல்கள்

Live TV

ONISLAAM SMS சேவை

SMS ஐ Active செய்ய


Type F (space) ONISLAAM and Send it to 40404 -on Your Mobile Phone (in Sri Lanka & Others, Click Here) ........... F இடைவெளி ONISLAAM என Type செய்து 40404 ற்கு அனுப்புங்கள் (இலங்கையில்)...... ஏனைய நாட்டவர்கள்--- இங்கு Click செய்யுங்கள்

பார்வையாளர்கள்

பிரமலமானவை

செய்திகள்

உங்கள் IP இலக்கம்

Sign by Danasoft - For Backgrounds and Layouts