முஸ்லிம் காங்கிரஸ அரசாங்கத்தமிலிருந்து விலக வேண்டுமென சிலர் எதிர்பார்த்திருப்பதாக
கூறிய முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம், சிலர்
தம்மை சிக்கலில் மாட்டிவிட காத்திருப்பதாகவும் கூறினார்.
நீங்கள் அரசாங்கத்திலிருந்து விலகிவிடின் உங்கள் மீது குற்றச்சாட்டுக்கள் அடுக்கப்படலாம், அந்த குற்றச்சாட்டுக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் வசம் உள்ளதாம். அதனாலும் நீங்கள் அரசாங்கத்திலிருந்து விலகுவதற்கு பின்நிற்கிறீர்களாமே என ரவூப் ஹக்கீமிடம் கேட்டபோது,
இறைவன் துணையுடன், நான் மனச்சாட்சி படி செயற்படுகிறேன். எவரையும் ஏமாற்றும் நோக்கமில்லை. நான் பேச வேண்டிய இடத்தில், பேச வேண்டியதை பேசுவேன். விவஸ்தையில்லாமல் பேசிகொண்டிருக்க மாட்டேன். விமர்சனங்கள், போலி குற்றச்சாட்டுக்கள் என்பது புதியவையல்ல. எனக்கு தெரியும் சில சதி முயற்சிகள் குறித்து. பொறியில் சிக்கவைக்க சிலர் முயலுகிறார்கள். அதில் சிக்கிச்கொள்ள நான் தயாரில்லை
முஸ்லிம் காங்கிரஸினையும், அதன் தலைமையையும் காலத்திற்கு காலம் சிலர் விமர்சகத்திற்கு உட்படுத்து வந்திருக்கின்றனர். நாங்கள் பல துரோகங்களை சந்தித்திருக்கிறோம். சிலர் ஊடகங்கள் மூலமாக எனக்கெதிரான பிரச்சாரங்களை மேற்கொள்கிறார்கள். என் மீது பாய்ச்சல் மேற்கொள்ள சிலர் தருணம் பார்த்திருக்கிறார்கள்.
இவ்வாறு தொடர்ந்த ரவூப் ஹக்கீமிடம், முஸ்லிம்களுக்கு எதிராக இவ்வளவு அநியாயங்கள் நடைபெற்றும் முஸ்லிம் காங்கிரஸ் ஏன் அரசாங்கத்துடன் இணைந்துள்ளது என மக்கள் கேள்வி கேட்கின்றனரே என கேட்டபோது,
அரசிலிருந்து முஸ்லிம் காங்கிரஸை விலக்க சிலர் முயற்சிக்கிறார்கள். மற்றும் சிலர் முஸ்லிம் காங்கரஸினை பலவீனப்படுத்த சதித்திட்டம் மேற்கொள்கிறார்கள். இந்தநிலையில்தான் நாங்கள் சில தந்திரோபாயங்களை மேற்கொள்ள வேண்டியுள்ளது.
தற்போதைய இந்த அரசாங்கத்துடன் நானாகவே சண்டைக்கு போக தயாரில்லை. இருந்தபோதும் சமூக விடயங்களில் நாங்கள் மிகுந்த கூர்மையுடன் உள்ளோம்.
இந்த அரசாங்கத்தடன் இணையும் போதே எங்களுக்கு தெரியும் நாங்கள் இந்த அரசாங்கத்திடமிருந்து விலகவும் வேண்டுமென்று. இந்த அரசாங்கம் முஸ்லிம் காங்கிரஸ் மூலம் நன்மையடைந்துள்ளது. பாராளுமன்றத்தில் இந்த அரசாங்கம் பெரும்பான்மைய பெறவும், சட்டங்களை நிறைவேற்றிக் கொள்ளவும் நாங்கள் ஆதரவளித்திருக்கிறோம்.
இவற்றுக்கு அப்பால் இந்த அரசாங்கத்துடன் முஸ்லிம் காங்கிரஸ் இணைந்திருக்காவிட்டால் முஸ்லிம் காங்கிரஸ் மீண்டும் பிளவுபட்டிருக்கும். முஸ்லிம் காங்கிரஸினை பிளவுபடுத்த சில சக்திகள் காத்திருந்தன. முஸ்லிம் காங்கிரஸில் ஏற்பாடும் பிளவானது முஸ்லிம் சமூகத்தை பாதிப்படையச் செய்யும். எனவேதான் தூரநோக்குடன் நாம் அரசாங்கத்துடன் இணைந்தோம். நாம் இணையும் போது காணப்பட்ட சூழ்நிலைகளைவிட தற்போது மாறுபட்ட நிலை உள்ளது. இந்நிலையில் அரசாங்கத்தை விட்டு உடனடியாக வெளியேறுவது முஸ்லிம் சமூகத்தை பாதிக்கும். கட்சியை பலவீனப்படுத்தும்.
சில சதிக்காராகளின் திட்டம் வெற்றியடையும். இவ்வாறு நான் கூறுவதால் முஸ்லிம் காங்கிரஸ் தொடர்ந்து அரசாங்கத்துடன் நிற்கும் என்றும் அர்த்தமாகிவிடாது.
மட்டக்களப்பில் பஷீர் செகுதாவூத்தினை ஓரங்கட்ட நீங்கள் அமீர் அலியை மீண்டும் முஸ்லிம் காங்கிரஸிற்கும் கொண்டுவர முயற்சிக்கிறீர்களாமே என்று ரவூப் ஹக்கீமிடம் ஜப்னா முஸ்லிம் இணையம் கேட்டபோது,
நான் முஸ்லிம் காங்கிரஸ் தலைவரராக இருந்துகொண்டு யாருக்கு எதிராகவும் சதிய செய்யவில்லை. முஸ்லிம் காங்கிரஸுக்கு எதிரான சதிகளையும் அனுமதிக்கமாட்டேன். இது மக்கள் இயக்கம். கட்சியிலுள்ளவர்கள் வெளியே போவார்கள். உள்ளே வருவார்கள். முஸ்லிம் காங்கிரஸினை பலமான ஒரு இயக்கமாக வைத்திருப்பது எங்களது நோக்கம்.
முஸ்லிம் காங்கிரஸ் மூலமாக அரசியல் இலக்குகளை அடைவது வாய்ப்பானது. முஸ்லிம் சமூகத்தின் இலக்குகளை வெற்றிகொள்ளவே நாங்களும் பயணிக்கிறோம் என்றார் ரவூப் ஹக்கீம்..!

0 கருத்துகள்: