ஜனாதிபதி மீது முஸ்லிம் சமூகம் வைத்துள்ள நம்பிக்கை ஒரு போதும் வீண் போகக் கூடாது என்று கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி எம்.எஸ்.எஸ்.அமீர் அலி கூறினார்.
ஏறாவூர் ஆட்டோ சாரதிகள் தொழிற்சங்கத்தினால் மட்டு. அலிகார் தேசியப் பாடசாலை மைதானத்தில் நடத்தப்பட்ட விளையாட்டு விழா நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
ஆட்டோ சாரதிகள் சங்கத்தின் தலைவர் பி.எம்.வகாப்தீன் தலைமையில் நடைபெற்ற இவ் விளையாட்டு விழாவில் அவர் இங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
நம்பிக்கை என்பது மனித வாழ்வில் மிகவும் முக்கியமான அம்சமாகும். ஒரு கணவனுக்கும் மனைவிக்கும் இடையில் இருக்கும் உறவு நம்பிக்கையின் அடிப்படையில் கட்டி வளர்க்கப்படுவது போன்று நண்பர்களிடத்திலும் சகோதரர்களிடத்திலும் காணப்படுகின்ற நம்பிக்கை மிக முக்கியமாகும்.
இந்த அடிப்படையில் எந்த மத கலாசாரமாக இருந்தாலும் சரிதான். மத வன்முறைகளை தூண்டுகின்ற அமைப்புகளிடமிருந்து இந்த முஸ்லிம் சமூகத்தை இந்த நாட்டின் தலைமை பாதுகாத்து தர வேண்டும் என்ற நம்பிக்கையை நாம் இந்த ஜனாதிபதி மீது வைத்துள்ளோம்.
அந்த வகையில் இந்த நாட்டில் வாழும் முஸ்லிம்களின் பாதுகாப்பு மற்றும் இருப்பு என்பனவற்றினை உறுதிப்படுத்துகின்ற நிலைவரத்தை ஜனாதிபதி மேற்கொண்டு வருவதை கண்டு சந்தோசமடைகின்றேன்.
அவ்வாறு தொடர் முயற்சியாக முஸ்லிம் சமூகத்திற்கு ஏற்படுகின்ற அத்தனை பிரச்சினைகள் மற்றும் சர்ச்சைகளில் இருந்து பாதுகாத்து தருகின்ற விடயத்தினை ஜனாதிபதி மேற்கொள்ள வேண்டும்.
கடந்த காலங்களில் முஸ்லிம் சமூகத்திற்கு ஏற்பட்ட நிகழ்வுகள் ஒரு வடுவாக இருந்த போதிலும், எதிர்காலத்தில் சிறுபான்மை தமிழ் - முஸ்லிம் சமூகம் பெரும்பான்மை சமூகத்தினால் பாதிக்கப்படக்கூடாது என்கின்ற உறுதிப்பாட்டினை ஜனாதிபதி வழங்கியுள்ளார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீது கொண்டுள்ள நம்பிக்கையின் காரணமாக சகல தேர்தல்களிலும் இந்த முஸ்லிம்கள் வாக்களித்துள்ளனர். இதனால் முஸ்லிம் சமூகத்திற்கு ஏற்படுகின்ற அத்தனை பிரச்சினைகளையும் ஜனாதிபதி தீர்த்து வைப்பார் என்ற நம்பிக்கையுடன் மக்கள் இருக்கின்றார்கள்.
ஆதலால் ஜனாதிபதி மீது முஸ்லிம் சமூகம் வைத்துள்ள நம்பிக்கை ஒருபோதும் வீண்போகக் கூடாது என்றார்.
கிழக்கு மாகாண சபை பிரதி முதல்வர் எம்.எஸ்.சுபைர், வர்த்தக சங்கத் தலைவர் எம்.எல்.ரெபுபாசம், மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம்.நஸீர், மனித உரிமை ஆணைக்குழுவின் பணிப்பாளர் எம்.எல்.ஏ.நஸீர் உட்பட பலர் இந்நிகழ்வில் உரையாற்றினர்.

0 கருத்துகள்: