பங்களாதேசில்
தொழிற்சாலை ஒன்று இடிந்து விழுந்த போது துண்டுக் கற்கள், உலோகத்
துண்டுகள், தூசிகளுக்கு மத்தியில் கட்டி அணைத்தவாறு உயிர்நீத்த தம்பதிகளின்
படம் கல் நெஞ்சையும் கரைக்கும் தன்மை கொண்டது.
பார்ப்பவர்களின் மனதை உருக வைக்கும் இந்தப் படத்தினை பார்த்து உலகெங்கும் கண்ணீர் விடாதவர்களே இல்லை எனலாம். குறித்த படம் உண்மைக் காதலுக்கு சாட்சியாக இவர்கள் விளங்குவதாக சமூக ஊடகங்களில் மக்கள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
பங்களதேஸ் தலைநகர் டாக்காவுக்கு அருகிலுள்ள தொழிற்சாலையில் இடம்பெற்ற இந்த
விபத்தில் 900 க்கும் மேற்பட்ட மக்கள் உயிர் நீத்துள்ளனர்.
2500 பேருக்கு மேல் குறித்த விபத்தில் காயமடைந்துள்ளனர். தொழிற்சாலை உரிமையாளர் பங்களாதேஷ் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
0 கருத்துகள்: