அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைவர் அசாத் சாலியின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைவர் றிஸ்வி முப்தி கொழும்பு மாநகர முன்னால் பிரதி மேயர் அசாத் சாலியின் குடும்பத்தினருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறினார். அசாத் சாலியின் கைது சம்பந்தமாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கவனத்தில் எடுத்துள்ளதாகவும் அவரது விடுதலை விடயமாக முடியுமான முயற்சிகளை மேற்கொள்வதாகவும் கூறினார்.

இதேபோல், நேற்று வெள்ளிக்கிழமை கொழும்புக் கோட்டை சதம் வீதி ஜுமுஆ மஸ்ஜிதில் ஜுமுஆத் தொழுகையின்பின் தலைவர் முப்தி றிஸ்வி அவர்கள் கூடியிருந்த மக்களிடம் அவரது விடுதலைக்காக பிரார்த்தனை செய்யும்படியும் வேண்டுகோள் விடுத்தார்.

அலவி மௌலானாவுடன் இது சம்பந்தமாக கலந்துரையாடல்

கைதாகி நோயுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் அசாத் சாலி விடயமாக மேல் மாகா ஆளுனர் அலவி மௌலானாவுடன் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைவர் றிஸ்வி முப்தி அவர்கள் தொலைபேசியில் தொடர்புகொண்டு கலந்துரையாடினார். அவ்வமயம், அசாத் சாலி எவ்வித பாணமும், ஆகாரமும் எடுக்காது இருப்பது ஷரீஅத்தின் பார்வையில் பிழையானதும் உடல் நலத்திற்கு கேடானதும் என்பதை அவருக்கு தெரிவிக்கும்படியும் வேண்டுகோள் விடுத்தார். அவர் விடுதலைக்காக ஆளுனர் அவர்கள் தம்மாலான முயற்சிகளை எடுக்கவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். இதேநேரம், ஜனாதிபதி அவர்களுக்கு கருனை மனுவொன்றும் அனுப்ப ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

M. A. M Haris Rashadhi
All Ceylon Jamiyyathul Ulama
211, Orabi Pasha Street
Colombo-10

0 கருத்துகள்:

துஆக்கள்

தொழிநுட்ப தகவல்கள்

Live TV

ONISLAAM SMS சேவை

SMS ஐ Active செய்ய


Type F (space) ONISLAAM and Send it to 40404 -on Your Mobile Phone (in Sri Lanka & Others, Click Here) ........... F இடைவெளி ONISLAAM என Type செய்து 40404 ற்கு அனுப்புங்கள் (இலங்கையில்)...... ஏனைய நாட்டவர்கள்--- இங்கு Click செய்யுங்கள்

பார்வையாளர்கள்

பிரமலமானவை

செய்திகள்

உங்கள் IP இலக்கம்

Sign by Danasoft - For Backgrounds and Layouts