எகிப்தில்
ஜனநாயகத்தை மீண்டும் நிலைநிறுத்தக்கோரி ஜனநாயக ரீதியில் போராடிய மக்களை
படுகொலைச் செய்த ராணுவம், தற்போது மக்களை கூட்டாக கைது செய்யும்
நடவடிக்கையை துவக்கியுள்ளது.
தங்களை ஆதரிக்காத அனைத்து
பிரிவினரையும் பிடித்துச் சிறையில் அடைத்து வருகிறது ராணுவம். 10
ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால், 1004 பேரை
மட்டுமே கைது செய்துள்ளதாக ராணுவம் கூறுகிறது.
கடந்த வெள்ளிக்கிழமை ஜனநாயக ரீதியில் பேரணி நடத்தியவர்கள் மீது
துப்பாக்கிச்சூடு நடத்திய ராணுவம், கெய்ரோவில் மட்டும் 190 பேரை கொலைச்
செய்ததாக புள்ளிவிபரங்கள் கூறுகின்றன. அதன் பின்னர் அவசரச் சட்டத்தை
மீறியதாக குற்றம் சாட்டி கண்ணில் தென்படுகின்ற மக்களையெல்லாம் கைது செய்து
வருகிறது எகிப்திய ராணுவம்.
கடந்த வெள்ளிக்கிழமை எதிர்ப்பு தினமாக
அறிவித்து கண்டனப் பேரணி நடத்தியவர்கள் மீது ஹெலிகாப்டர் மற்றும் கவச
வாகனங்களில் இருந்து துப்பாக்கியால் சுட்டது ராணுவம்.
போராட்டத்தில் ஈடுபட்டோர் தலைநகரில் இருந்து வெளியேறாமலிருக்க ரயில்கள் அனைத்தும் ரத்துச் செய்யப்பட்டுள்ளன.
0 கருத்துகள்: