சவுதி அரேபியாவில் உள்ள ஜிசான் பகுதியில் வசித்து வருபவர், காலித் மோஷின் ஷைரி.
சிறு வயது முதல் உடல் பருமன் நோயால் பாதிக்கப்பட்ட இவர் தற்போது 610 கிலோ
எடை கொண்ட மாமிச மலையாக ஆகி விட்டார். இவரது உடல் பருமனே வீட்டு
வாயிற்படியை விட்டு இவர் வெளியே செல்வதை அனுமதிக்காததால் கடந்த 2 ஆண்டுகளாக
மோஷின் ஷைரி வீட்டினுள்ளேயே முடங்கி கிடக்கிறார்.
இவரைப் பற்றிய செய்தி தொகுப்புகள் உள்ளூர் ஊடகங்களில் வெளியாகின. இந்த
செய்தி சவுதி மன்னர் அப்துல்லாவின் காதுகளை எட்டியது. உடனடியாக காலித்
மோஷின் ஷைரியை வீட்டை விட்டு அப்புறப்படுத்தி, ஆஸ்பத்திரியில் அனுமதித்து,
அரசு செலவில் எடை குறைப்பு சிகிச்சை வழங்குமாறு மன்னர் உத்தரவிட்டார்.
இதனையடுத்து, இரண்டாவது மாடியில் இருந்து இவரை படுக்க வைத்தபடி கீழே இறக்க
அமெரிக்காவில் இருந்து பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட படுக்கை
வரவழைக்கப்பட்டது. நேற்று அவரது வீட்டுக்கு சென்ற ஆஸ்பத்திரி ஊழியர்களும்,
மீட்புப் படையினரும் அவரை படுக்க வைத்து இரண்டாவது மாடியில் இருந்து
பத்திரமாக கிரேன் மூலம் கீழே இறக்கினார்கள்.
அங்கிருந்து
ஆம்புலன்சில் ஏற்றிச் செல்லப்பட்ட அவர், ஜிசானில் இருந்து சவுதி தலைநகர்
ரியாத்துக்கு சிறப்பு விமானம் மூலம் அழைத்துச் செல்லப்பட்டார். அவருக்கு
எந்த ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட உள்ளது என்பது ரகசியமாக
பாதுகாக்கப்பட்டு வருகிறது.
0 கருத்துகள்: