பம்பலபிடியில்
ஊடகவியலாளர் ஒருவரது வீட்டில் இன்று அதிகாலை இடம்பெற்ற கொள்ளை முயற்சி
முறியடிக்கப்பட்டுள்ளதாகவும் கொள்ளையர்களில் ஒருவர் பொலிஸ் உத்தியோகத்தர்
ஒருவரை கத்தியால் குத்திக் காயப்படுத்தியதையடுத்து அவர் மீது துப்பாக்கி
பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சண்டே
லீடர் பத்திரிகையின் உதவி ஆசிரியராகவும், இலங்கை ஊடகவியலாளர்கள்
தொழிற்சங்கத்தின் தலைவியாகவும் பணியாற்றும் மந்தனா இஸ்மாயில் அபேவிக்ரம
(படத்தில் வலது) வின் வீட்டிலேயே இக்கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அதன் போது 119 என்ற அவசர உதவி இலக்கம் ஊடாக காவல்துறை தொடர்பு
கொள்ளப்பட்டதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸ், கொள்ளையை
முறியடித்து சம்பந்தப்பட்ட ஐவரைக் கைது செய்துள்ளதாகவும்
தெரிவிக்கப்படுகிறது.
0 கருத்துகள்: