இலங்கைத்
தலைநகர் கொழும்பில் கிராண்ட்பாஸ் சுவர்ண சைத்திய வீதியில் உள்ள பள்ளிவாசல்
மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில், நான்கு பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
ஏராளமானவர்கள் காயம் அடைந்துள்ளனர். கடந்த ஆண்டும் தம்புள்ளையில் உள்ள
பள்ளிவாசல் மீது தாக்குதல் நடத்தினர்.
இலங்கையில் பள்ளிவாசல்கள்
மீது தொடர்ந்து தாக்குதல் நடத்திவரும் பௌத்த வெறியர்களைக் கண்டித்து
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வெள்ளிக்கிமை
(16.08.2013) சென்னையில் மாபெரும்கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தமுமுக
பொருளாளர் ஓ.யு.ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் தலைமை தாங்கினார். மாநில துணைத்
தலைவர் குணங்குடி ஆர்.எம்.அனிபா அவர்கள் கண்டன உரை ஆற்றினார். மமக இணை
பொதுச் செயலாளர் எஸ்.எஸ். ஹாரூண் ரசீது, தலைமைக்கழகப் பேச்சாளர்கள்
என்.ஏ.தைமிய்யா, ஷமீம் அஹ்மது, முஹம்மது மைதீன்,வடசென்னை மாவட்டத் தலைவர்
உஸ்மான் அலி, செயலாளர்கள் தாஹா நவீன், முஹம்மது தமீம்,பொருளாளர் அக்பர்
அலி, தென்சென்னை மாவட்ட செயலாளர்கள் முஹம்மது ஹனிபா,
எஸ்.எம்.ஜின்னா,பொருளாளர் முகம்மது நாசர் உட்பட 500க்கும் மேற்பட்டவர்கள்
கலந்துகொண்டு இலங்கை அரசுக்கு எதிராகவும், பவுத்த வெறியர்களுக்கு
எதிராகவும் கண்டனக் கோஷங்களை எழுப்பினார்கள்.
0 கருத்துகள்: