சிரியாவில் அமெரிக்க இராணுவ தலையீடு ஏறத்தாழ நெருங்கி வருவதை சூழ்நிலைகள் எடுத்தியம்புகின்றன.
பொதுமக்கள் மீது இரசாயன தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டதற்கான வீடியோ
ஆதாரங்கள் பரவலாக வெளிவந்து கொண்டிருக்கும் இந்நிலையில் பென்டகனிடம்
அமெரிக்க ஜனாதிபதி இராணு நடவடிக்கை தொடர்பான ஆலோசனைகளில் இறங்கியுள்ளதாக
தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள
பாதுகாப்பு செயலாளர் சக் ஹெகல், சிரிய எல்லைக்கு அருகாமையில் அமெரிக்க
நிலைகள் பலப்படுத்தப்பட்டு வருவதாகவும் இராணுவ நடவடிக்கை தொடர்பான
முடிவுகளை எடுக்கும் நேரம் நெருங்கி விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கள நிலவரம் தொடர்பாக தாம் ஆழ்ந்த கவலையும் அக்கறையும்
கொண்டுள்ளதாக அதிபர் ஒபாமா நேற்றைய தினம் தெரிவித்திருந்தமையும்
குறிப்பிடத்தக்கது.
ஈராக் விவகாரம் போன்றே இறுதி வரை குரல்
கொடுத்துவிட்டுப் பின் ஒதுங்கிவிடும் நிலைப்பாட்டையே ரஷ்யா எடுக்குமா
என்பதும் ஆழ்ந்து அவதானிக்கப்படும் விடயமாகும்.
0 கருத்துகள்: