அண்மையில் பதுளை யூ சீ எம் சீ (மலையக முஸ்லிம் கவுன்சில்) ஏற்பாடு செய்த இப்தார் நிகழவில், பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரை நிகழ்த்திய மஹியங்கனை மஹவெளி ரஜமஹா விகாரை விகாராதிபதி வடரேக விஜித தேரர் இன்று பிற்பகல் கண்டியிலிருந்து கொழும்பு நோக்கி பயணம் செய்து கொண்டிருக்கையில் கேகாலை நகர் அருகில் இடைமரிக்கப் பட்டு கடுமையாக தாக்கப் பட்டுள்ளார் .

‘என்னடா எங்கள் இயக்கத்தை தாக்கி பேசினாய்”. என்று கோஷமிட்டபடி இவரும் இவருடைய சாரதியும் தாக்கப் பட்டுள்ளார்கள் . இவரின் சாரதியின் உடைகள் கிழித்தெறியப்பட்டு வாகன ஓட்டுனர் அனுமதிப் பத்திரம் உட்பட தஸ்தாவேஜுகள் கிழித்து வீசப் பட்டுள்ளன , இவர் பயணித்த இவரின் வாகனம் பலத்த சேதங்களுக்கு உள்ளாக்கப்பட்டு ஒரு கதவு கழட்டி வீசிஎறியப் பட்டுள்ளது. இவரின் சாரதி மிகவும் சிரமபட்டு வாகனத்தை கேகாலை போலிசுக்கு கொண்டு சேர்த்துள்ளார். தற்போது இவர் பாதுகாப்பாக கேகாலை போலிஸ் நிலையத்தில் உள்ளார்.

நேற்றைய தினம் இரவு இவர் பொறுப்பில் உள்ள மகாவெளி ரஜமக விகாரையும் இனந் தெரியாதவர்களால் தாக்கப் பட்டுள்ளது . தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கும் விஜித தேரோ, கேகாலை போலிஸ் நிலையத்திலிருந்து தொலை பேசியூடாக சற்று முன் கருத்து தெரிவிக்கையில்,” அண்மைகாலமாக நாட்டில் தலை தூக்கி இருக்கும் இனவாதம் எல்லை மீறி சென்று கொண்டிருப்பது இத் தாக்குதல் மூலம் நிரூபணம் ஆகிறது என்றும் ஒரு சிலரின் நாசகார சிந்தனைகளுக்கு இடமளித்து இந்த நாட்டை மீண்டும் இரத்த கலரியாக்கிவிட முடியாது ,” என்றும் கருத்துக் கூறினார், பல ஊடக வியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து தொடர்ந்தும் கருத்து கூறிய அவர் , நான் ஒரு பௌத்த துறவி என்ற அடிபடையில் பௌத்த மதத்திற்கு எதிரான எந்த கருத்தையும் நான் எந்த இடத்திலும் கூற வில்லை , மாறாக பௌத்த மதத்தின் நற்போதனைகளையே மக்கள் முன் உரையாற்றினேன். இனிமேலும் உரையாற்றுவேன்.

அண்மையில் மஹியங்கனை பள்ளிவாசலை முஸ்லிம்களின் நோன்புகாலத்தில் மூடிவிட முயற்சி செய்யும் போது நோன்பு காலம் முடியும் வரை பொறுத்திருந்து அதை செய்வோம் என்று பிரதேச சபை அமர்வின் போது ஆலோசனை முன் வைத்தேன் . அதனாலேயே என்னை எதிர்த்தார்கள் .

உண்மையில் மஹியங்கனை ரஜமஹா விகாரை முன்புரமாகவும் புனித போதி மரம் அருகிலும் , மறுபக்கத்தில் வேஹெரையும் அமைந்த இடத்தில் ஒரு பள்ளிவாயில் அமைத்து அதில் ஒலிபெருக்கிகளில் முஸ்லிம்கள் சப்தமிட்டு வணக்க வழிபாடுகளில் ஈடுபடும் போது வேண்டத்தகாத பல பிரச்சினைகள் தோன்றும், ஆகவே குறிப்பிட்ட இடத்துக்கு அப்பால் தெரிவு செய்யப் பட்ட ஓரிடத்தில் முஸ்லிம்களுக்கான ஒரு தொழுகை அறையை நிர்மாணிக்கலாம் என்றே நான் கூறிவந்தேன் .

அத்துடன் பங்கர கம முஸ்லிம்கள் பலர் என்னிடம் எழுத்து மூலம் மஹியங்கனை நகரில் ஒரு பள்ளிவாயில் அமைய தேவையில்லை என்று வேண்டுதல் விடுத்தார்கள். ஆகவே இந்த பிரச்சினையை சுமுகமாக தீர்க்கவே நான் முயற்சி செய்தேன் . ஆனால் பொதுபல சேனா வினர் இதை அசிங்கமாக கையாண்டனர். முஸ்லிம் சகோதர்கள் மீது குரோதம் ஏற்படும் வகையில் நடந்து கொண்டனர். கடந்த ஜூன்மாதம் 12ந் திகதி இரவு பொது பாலா சேனாவினர் மகியங்கனைக்கு வந்தனர்.

ஆகஸ்ட் 2ம் திகதி நடைபெற்ற கூட்டதிற்கான முன்னாயத்த நடவடிக்கைகளுக்கே இவர்கள் அப்போது வந்திருந்தார்கள் , இவர்கள் வந்துசென்ற அடுத்த நாள் இரவே மஹியங்கனை பள்ளிவாசலுக்குள் பன்றியொன்றை வெட்டி வீசியிருந்தார்கள், அதே போல் இவர்களின் ஆகஸ்ட் 2ம திகதி மஹியங்கனையில் நடந்த பொது கூட்டத்திற்கு முதல் நாள் மஹியங்கனையில் வாழ்ந்த மூன்று குடும்பங்கள் நாடோடிகளை போல் தமது பெட்டி படுக்கைகளுடன் ஒரு குடும்பம் அக்கறை பத்திற்கும் , இன்னொரு குடும்பம் காத்தான் குடிக்கும். மற்ற குடும்பம் கல்முனைக்கும் நிரந்தரமாக சென்று விட்டார்கள் , இவர்கள் தான் கூறுகிறார்கள் இந்த நாட்டில் ஒரு முஸ்லிமுக்கேனும் எந்தவொரு சேதமும் செய்ய வில்லை என்று. இது போன்ற செயல்களை பௌத்தம் ஒருநாளும் போதிக்க வில்லை . இந்த நாட்டில் வாழும் சிங்கள முஸ்லிம் தமிழ் சகோதரர்கள் என்றும் போல் எதிர்காலத்திலும் வாழ வேண்டும், அதற்காக என்னுயிரை பணயம் வைத்தேனும் நான் செயற்படுவேன் என்றும் தெரிவித்தார்.

இந்த சித்தியை எழுதிக் கொண்டிருக்கும் போது வரும் தகவல்களின் படி குறிப்பிட்ட இத் தாக்குதல் நிகழ்வு மறைக்கப் பட்டு, தேரர் பயணம் செய்த வாகனத்துடன் இன்னொரு வாகனம் மோதியதால் ஏற்பட்ட நிகழ்வாக சித்தரிக்கப்பட்டு போலீசில் புகார் எழுதுவதற்கான ஏற்பாடுகள் திரை மறைவில் நடப்பதாக அறிய முடிகின்றது.

0 கருத்துகள்:

துஆக்கள்

தொழிநுட்ப தகவல்கள்

Live TV

ONISLAAM SMS சேவை

SMS ஐ Active செய்ய


Type F (space) ONISLAAM and Send it to 40404 -on Your Mobile Phone (in Sri Lanka & Others, Click Here) ........... F இடைவெளி ONISLAAM என Type செய்து 40404 ற்கு அனுப்புங்கள் (இலங்கையில்)...... ஏனைய நாட்டவர்கள்--- இங்கு Click செய்யுங்கள்

பார்வையாளர்கள்

பிரமலமானவை

செய்திகள்

உங்கள் IP இலக்கம்

Sign by Danasoft - For Backgrounds and Layouts