சர்வதேச
தீய சக்திளினால் சிக்குண்ட சில அமைப்புகள் மாடுகள் அறுக்க வேண்டாம் எனக்
கூறிக் கொண்டு வருக்கின்றனர் ஆனால் மாடுகள் அறுக்க வேண்டாம் எனக் கூறுவோர்
கோழிகளையும் அறுக்க வேண்டாம் தின்ன வேண்டாம் என்று கூற மாட்டார்களா ?
அதுவும் உயிரினமாகத்தான் இருந்து கொண்டிருக்கிறது. முஸ்லிம்களுடைய சமய
விவகாரத்தில் நீதமாக நடந்து கொள்ளுமாறு ஜனாதிபதி என்னிடம்
வேண்டுகோள்விடுத்துள்ளார்.
காலம் காலமாக இருந்து வருகின்ற இந்த மாடுகள் அறுக்கின்ற முறையை எவராலும்
மாற்றவோ தடுக்கவோ முடியாது என்று பிரதம டி. மு. ஜயரட்ன தெரிவித்தார்.
மத்திய மாகாண சபைத் தேர்தலுக்காக கண்டி மாவட்டத்தில் போட்டியிடும் ரிஸ்வி
பாரூக், ஆனந்த அலுத்கமகே, அநுரத்த ஜயரட்ன ஆகியோரை ஆதரித்து தொழிலதிபர்
புர்க்கான் ஹாஜயார் இல்லத்தில் அரவது தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில்
கலந்து கொண்ட பிரதமர் அங்கு இவ்வாறு குறிப்பிட்டார்.
உலக அரங்கில்
மேற்கத்தியவாதிகளினால் முஸ்லிம்களுக்கு எதிரான சதி முயற்சிகள்
மேற்கொள்ளப்படுகின்றன. சிறப்புமிக்க அரபு நாடுகள் அழித்தொழிக்கப்படுகின்றன.
ஒவ்வொரு நாடுகள் பற்றியும் நல்ல வரலாறுகள் உள்ளன. அங்கு எத்தனையோ உயிர்கள்
கொல்லப்படுகின்றன. இலங்கை நாட்டின் மீது மேற்கத்திய நாடுகள் சதி
முயற்சியைக் கொண்டு வந்து சமூகங்களுக்கிடையே பிளவை உண்டு பண்ணி நாட்டில்
குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிகள் செய்கின்றன. சில சில சம்வங்கள்
இடம்பெற்றுள்ளன.. அதனை முஸ்லிம்களுக்கு எந்தப் பாதிப்புக்களும் ஏற்பாடாமல்
மிக நிதாதனத்துடன் தீர்த்து வைத்துள்ளோம். சமீபத்தில் நடந்த கிராண்பாஸ்
சம்வம் தொடாபாக பெரும் எடுத்துக் காட்டாக இருக்கிறது.
புரதான
அரசர்களுக்கும் முஸ்லிம்களுக்குமிடையே நெருக்கமான உறவு இருந்த வந்துள்ளன.
அரசர்கள் முஸ்லிம்கள் பள்ளிவாசல்களை நிர்மாணித்துக் கொள்வதற்காக காணிகள்.
நிலங்கள் என்பன வழங்கி அவர்களை கௌரவித்துள்ளனர். முஸ்லிம்களும்
அரசர்களுக்கு நல்லாதரவாக இருந்துள்ளனர். இந்நாட்டில் முஸ்லிம்கள் சிங்கள
தமிழ், கிறிஸ்தவ மக்கள் பரஸ்பர நல்லெண்ணத்துடனும் புரிந்துணர்வுடனும்
ஒற்றுமையாக வாழ்கின்றனர். அதே போன்றுதான் நான் சிறுபாராயும் தொட்டு இன்று
வரை இந்த கம்பளை மண்ணில் முஸ்லிம்களுடன் மிகவும் அந்நியொந்நியமாக பழகி
வருக்கின்றேன்.
இந்தச் சந்தர்ப்பத்தில் மத்திய மாகாண சபைத்
தேர்தல் நடைபெறுகின்றது. கண்டி வாழ் முஸ்லிம் மக்களின் வாழ்வுக்கும்
வளத்திற்கும் பலத்திற்கும் ஆதாரமாக விளங்கக் கூடியது முஸ்லிம்களுடைய
அரசியல் பிரநிதிதத்துவமாகும். கண்டி மாட்டத்தில் முஸ்லிம் அரசியல் பலம்
அதிகரிக்கின்ற பட்சத்தில் முஸ்லிம்களுடைய பாதுகாப்பு பலமும் அதிகரிக்கும்.
எனவே இம்முறை பொதுசன ஐக்கிய மக்கள் சதந்திர முன்னணியில் போட்டியிடுகின்ற
வேட்பாளர்களைத் தெரிவு செய்வது முஸ்லிம் மக்கள் சுமத்தப்பட்ட பெரும்
பொறுப்பாகும். என்று பிரமதர் அங்கு மேலம் குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் கண்டி மாவட்ட வேட்பாளர்களான ரிஸ்வி பாரூக், ஆனந்த ஆலுத்கமமே உட்பட பலர் உரை நிகழ்த்தினர்.
0 கருத்துகள்: