ராஜீவ்
கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு மகளிர் சிறையில்
அடைத்துவைக்கப்பட்டுள்ள நளினி தங்கியிருக்கும் சிறை அறையினை பார்வையிட
நீதிபதி முடிவு செய்துள்ளார்.
வேலூர் சிறையில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின்போது நளினி அறையில் செல்போன் சிக்கியதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக வழக்கும் தொடரப்பட்டது. இந்த வழக்கின் விசாரணைக்காக நளினி வேலூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜரானார்.
இந்த வழக்கில் சிறைக் கண்காணிப்பாளர் ராஜலட்சுமி நீதிபதி மும்மூர்த்தியிடம் சாட்சியம் அளித்தார்.
நளினி அறையிலிருந்து கைப்பற்றப்பட்டதாக கூறப்படும் கைப்பேசியை அவர் அடையாளம் காட்டினார்.
பிளாஸ்டிக் வாளி, கட்டப் பை உள்ளிட்டவையும் பிற சாட்சிகளால் அடையாளம் காட்டப்பட்டது.
இந்நிலையில் சாட்சிகள் விசாரணையைத் தொடர்ந்து வருகிற 23ம் திகதி நளினி
இருந்த அறைய நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்யலாம் என்று நீதிபதி
அறிவித்துள்ளார்.
இந்த ஆய்வில், அரசு சட்டத்தரணி மற்றும் நளினியின் சட்டத்தரணியும் பங்கேற்கவுள்ளனர்.
0 கருத்துகள்: