(இர்பான் ஷிஹாபுதீன்)
எகிப்தின் முஸ்லிம் சகோரத்துவ இயக்கத்தை ஒரு பயங்கரவாத அமைப்பாக கருதி சட்டபூர்வமாக அதைக் கலைக்க தற்போதைய எகிப்து அரசாங்கம் முயற்சி செய்து வருகின்றன.

ஏன் இந்த அமைப்பை பயங்கரவாத அமைப்பாக கருத வேண்டும்? அஞ்ச வேண்டும்???

காரணம் இவைதான்..!

முஸ்லிம் சகோரத்துவ இயக்கத்தில் எகிப்தில் மட்டும் அங்கத்தவராக உள்ள (அன்னளவாக) இவர்கள் சாதிப்பார்கள் என்ற அச்சம்தான்..

1 - 40000 பல்கலைக்கழக கலாநிதிகள்.

2 - 70000 பொறியியலாளர்கள்.

3 - 40000 வைத்தியர்கள்.

4 - இலட்சக் கணக்கான இஸ்லாமிய அறிஞர்கள்.

5 - 15 இலட்சம் குடும்பங்களை இவ்வியக்கம் சமூக,பொருளாதார ரீதியாக பராமரிக்கின்றது.

6 - 3 இலட்சம் குர்ஆணை சுமந்த “ஹாபில்களை” இவ்வியக்கம் தன்னகத்தே கொண்டுள்ளது.

7 - எகிப்தில் 3000 காரியாலயங்களை இரண்டு வருடங்களில் உத்தியோகபூர்வமாக நிறுவியுள்ளது.

8 - 80 நாடுகளில் இதன் கிளைகள் காணப்படுகின்றன.

9 - இவ்வியக்கத்தின் 10000 பேர் 1948 ஆம் ஆண்டு பாலஸ்தீனத்தில் இஸ்ரேலுக்கு எதிராக போராடியுள்ளனர்.

10 - 2011 ஆம் ஆண்டு முபாரக்கை வீழ்த்தியபோது இவ்வியக்கத்தின் 365 பேர் ஷஹீதாக்கப்பட்டுள்ளனர்.

11- இவ்வியக்க்கதின் அரசியல் பிரிவு தலைவர் கலாநிதி முர்சி ஒருவருட காலம் எகிப்தை ஆட்சி செய்தமை அமெரிக்காவுக்கும் இஸ்ரேலுக்கும் சில மத்திய கிழக்கு நாடுகளுக்கும் தலையிடியாகவே இருந்தது அவரின் சாதனைகள் சில பெயர் தாங்கி முஸ்லிம் தலைவர்களுக்கு தாங்க முடியாதவை மட்டுமல்லாது இஸ்லாமிய நாடுகளின் தலைவர்களை வழிநடாத்தும் சக்தியாக அவர் மாறினார்.

இஹ்வான்களை பூண்டோடு அழிப்பதாயின் இவர்கள் அனைவரையும் அழிக்க வேண்டும் இது சாத்தியமற்ற ஒரு முயற்சியே.

இதன் அங்கத்தவர்களில் சிலர் அநியாயமாக ஷஹீதாக்கப்படலாம், ஆனால் அவர்கள் உலகத்துக்கு விட்டுச் சென்ற இஸ்லாமிய சிந்தனையை யாரால்தான் அழிக்க முடியும்? இச் சிந்தனையை உலகை ஆளும் வரை மனிதர்கள் உருவாகிக் கொண்டே இருப்பார்கள் இன்ஷா அல்லாஹ்.

நன்றி- Jaffna Muslim

0 கருத்துகள்:

துஆக்கள்

தொழிநுட்ப தகவல்கள்

Live TV

ONISLAAM SMS சேவை

SMS ஐ Active செய்ய


Type F (space) ONISLAAM and Send it to 40404 -on Your Mobile Phone (in Sri Lanka & Others, Click Here) ........... F இடைவெளி ONISLAAM என Type செய்து 40404 ற்கு அனுப்புங்கள் (இலங்கையில்)...... ஏனைய நாட்டவர்கள்--- இங்கு Click செய்யுங்கள்

பார்வையாளர்கள்

பிரமலமானவை

செய்திகள்

உங்கள் IP இலக்கம்

Sign by Danasoft - For Backgrounds and Layouts