நாட்டில்
தாக்கப்பட்டுள்ள பள்ளிவாயல்கள் பற்றிய முழுமையான அறிக்கை ஒன்றை ஐ நா மனித
உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளையிடம் முன்வைப்பதற்கான முயற்சிகளை முஸ்லிம்
மக்கள் கட்சி மேற்கொண்டு வருவதாக அதன் தலைவர் மௌலவி முபாறக் அப்துல்
தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் தெரிவித்துள்ளதாவது
யுத்தம்
முடிவுற்றதை தொடர்ந்து அமைதியாக வாழ்ந்த முஸ்லிம்களின் மீது பல அராஜகங்கள்
கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன. அதன் தொடராக முஸ்லிம்களின் மத உரிமைகள் பல
மீறப்பட்டுள்ளன. இந்த வகையில் பள்ளிவாயல்கள் மீதான தாக்குதல்கள் மிக மோசமான
அநாகரிகமான மனித உரிமை மீறலாகும்.
இத்தகைய மீறல்களை ஐ நாவில் முன்வைத்து நியாயம் தேடவதற்காக தாக்கப்பட்ட
பள்ளிவாயல்கள் பற்றிய முழுமையான ஆதாரபூர்வமான தகவல்களை தொகுத்து நவநீதம்
பி;ள்ளை இலங்கை வரும் போது அவரிடம் சமர்ப்பிக்க முஸ்லிம் மக்கள் கட்சி
முயற்சி எடுத்து வருகிறது. இத்தகைய தகவல்களை கட்சியின் உப செயலாளரும்,
கொழும்பு மாநகர சபை முன்னாள் உறுப்பினருமான இஸ்ஸதீனின் தலைமையில் நவநீதன்
பிள்ளையிடம் முன் வைக்கப்படவுள்ளது.
ஆகவே முஸ்லிம் மக்கள்
தாக்கப்பட்ட தமது பள்ளிவாயல்கள் சம்பந்தமான ஆதாரபூர்வமான தகவல்களை முஸ்லிம்
மக்கள் கட்சி, அக்றம் பில்டிங், 291, பிரதான வீதி, கல்முனை எனும்
முகவரிக்கு அனுப்பி வைக்கும்படி கேட்கப்படுகிறார்கள்.
0 கருத்துகள்: