”
கடந்த ஆகஸ்ட் மாதம் இரண்டாம் திகதி மஹியங்கனையில் நடைபெற்ற “பொது பல
சேனா” பொதுக்கூட்டதின் போது அதன் செயலாளர் ஞான சார தேரர் உரை
நிகழ்த்துகையில், இதுவரையில் தாம் எந்த ஒரு முஸ்லிமையும் அச்சுறுத்தவோ
இம்சிக்கவோ மனதளவில் புண்படுத்தவோ இல்லை என்றும் அவ்வாறான தொரு சந்தர்பத்தை
எவராவது நிரூபித்தால் தாம் மகியங்கனை ராஜமகா விகாரைக்கு முன்னால் வந்து
தமது காவி உடையை களைந்து விடுவதாகவும் அதன் பின்பு ராணுவத்தில் இணைந்து
விடுவதாகவும் சவால் விடுத்தார்.
ஞானசார தேரரின் கடந்த கால
செயற்பாடுகளால் அவர் “ஒரு” முஸ்லிமின் மனதை மாத்திரம் புண்படுத்த வில்லை,
“ஒரு” முஸ்லிமை மாத்திரம் இழிவு படுத்த வில்லை . “ஒரு” முஸ்லிமை மாத்திரம்
அச்சுறுத்த வில்லை மாறாக இலங்கை வாழ முழு முஸ்லிம் சமூகத்தினது மனதையும்
புண்படுத்தி, இழிவு படுத்தி அச்சமுறவும் செய்தார்.
அதாவது இலங்கையில் அல்கைதா அல்லது அல்ஜிஹாத் போன்ற அமைப்புகளின்
வலையமைப்பு இலங்கையில் செயல் படவில்லை என்று இந்நாட்டின் உலவுப்பிரிவு
உத்தியோகப் பூர்வமாக இந்நாட்டு மக்களுக்கும் சர்வதேசத்திட்கும் அறிவித்த
ஒரு சில தினங்களுக்கு பின், ஞான சார தேரர், இலங்கையில் முஸ்லிம்
பள்ளிவாயல்கள் அல்கைதா பங்கர்களாக செயல் படுவதாகவும் குறிப்பாக
அக்குரணையில் 83 பள்ளிவாயல்கள் அல்கைதா பங்கர்களாக செயற்படுவதாக
பகிரங்கமாக கருத்து தெரிவித்தார். இலங்கை அரசாங்கத்தையும்
உளவுப்பிரிவையும் கொச்சை படுத்தும் வகையிலும் சர்வதேச மட்டத்தில் இலங்கை
அரசாங்கத்தை அசௌகரியதிட்குள்ளாக்கும் வகையிலும் அவர்தெரிவித்த அந்த
கருத்தானது முழு முஸ்லிம் சமூகத்தினதும் மனதை புண்படுத்தியது. சகோதர
சமூகங்களுக்கு முஸ்லிம்கள் மீதும் பள்ளிவாசல்கள் மீதும் சந்தேகப்
பார்வையை ஏற்படுத்தியது. இதன் காரணமாகவே இப்போது பள்ளிவாயல்கள்
தாக்கப்படுகின்றன.ஆகவே ஞானசார தேரர் அவர்களே நீங்கள் சவால் விட்டு
வாகுறுதியளித்தது போல் உங்கள் காவியுடையை களைந்து விடவேண்டிய தருணம் இதுவென
நினைக்கின்றேன் என பதுளையில் இயங்கும் சமூக சேவை நிறுவனமொன்றின் தலைவர்
முஸம்மில் பொது மக்கள் கலந்து கொண்ட கூட்டம் ஒன்றில் குரல்
எழுப்பியுள்ளார்.
நீங்கள் சொன்னபடி காவியுடையை களைந்தால் போதும்
இராணுவத்தில் சேரவேண்டிய தேவையில்லையெனவும் மலையக முஸ்லிம் கவுன்சில்
(ucmc) மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட விஷேட இப்தார் நிகழ்வில் சிறப்புரை
நிகழ்த்துகையில் , பதுளை மாநகர பிதா உபாலி நிஸ்ஸங்க ஜயசேகர , ஊவா மாகாண
சபை உறுப்பினர் மானெல் ரத்னாயக, பிரதி நகர பிதா நாலக நிஸ்ஸங்க , பதுளை
பிரதேச செயலாளர் ஜோபியஸ் , மற்றும் அமைச்சர் நிமல் சிறிபால தே சில்வா
அவர்களின் இணைப்பு செயலாளர் உற்பட பெருந்திரளான மக்கள் முன்னணியில்
பகிரங்கமாக சவால் விட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
0 கருத்துகள்: