அங்காரா: எகிப்தில் நடப்பது அரச பயங்கரவாதம் என்று துருக்கி பிரதமர் ரஜப் தய்யிப் எர்துகான் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறியது: ‘’எகிப்தின் இராணுவ தலைமை தளபதி அப்துல் ஃபத்தாஹ்
அல் ஸீஸியும், சிரியாவின் அதிபர் பஸ்ஸாருல் அஸதும் ஒரே குணம் கொண்டவர்கள்.
கெய்ரோவில் ஃபதஹ் மஸ்ஜிதை இராணுவம் சுற்றி வளைத்து போராட்டம் நடத்திய
மக்களை விரட்டியுள்ளது. மஸ்ஜிதில் தொழுகை நடத்தியவர்கள் கூட
தாக்கப்படுகின்றனர்.
சிரியாவிலும், எகிப்திலும் இராணுவம் சாதாரண
மக்களையும், வழிப்பாட்டுத் தலங்களையும் குறி வைக்கிறது. சிரியாவின் அதிபர்
பஸ்ஸாருல் அஸத் என்றாலும், எகிப்தின் இராணுவ தலைமைத் தளபதி அப்துல்
ஃபத்தாஹ் அல் ஸீஸி என்றாலும் சம்பவிப்பதெல்லாம் ஒன்றுதான்.’’
0 கருத்துகள்: