நமது
சமூகத்தையோ, அரசியல் வாதிகளையோ யாரையும் நம்பிப் பயனில்லை எனும் நிலையில்
தமது உரிமைகளுக்காகத் தாம் மாத்திரமே போராட வேண்டிய சூழ்நிலை உணரப்பட்டு
தம்புள்ள பள்ளிவாசல் மற்றும் உடமைகளை பாதுகாக்க கடந்த பத்து தினங்களாக
தம்புள்ள கண்டலம சந்தியில் மேற்கொள்ளப்பட்ட சத்தியாக்கிரக
போராட்டம் நாமல் ராஜபக் ஷ எம். பி. யின் தலையீட்டினை அடுத்து முடிவுக்கு
வந்துள்ளது.
தேவையான
ஆவணங்களுடன் தன்னைச் சந்திக்குமாறு நாமல் ராஜபக்ச
அறிவுறுத்தியதாகவும் அடுத்தவாரம் நாமல் ராஜபக்ஷவைச்
சந்திக்கவுள்ளதாக போராட்ட ஏற்பாட்டாளரும் தம்புள்ளை ஹைரியா
பள்ளிவாசல் நிர்வாக சபை உறுப்பினருமான எஸ். வை. எம். சலீம்தீன்
தெரிவித்ததாக விடிவெள்ளி செய்தித் தளம் வெளியிட்டிருந்தது.
நாமல்
ராஜபக்ஷ ஊடாக ஜனாதிபதியைச் சந்தித்து வீட்டுரிமையாளர்களின்
பிரச்சினைக்கும் பள்ளிவாயல் விவகாரத்துக்கும் விரைவில் தீர்வு
பெற்றுக் கொள்ளவுள்ளோம் என ஏற்பாட்டாளர்கள் சார்பில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
தம்புள்ளையில் அகற்றப்படவுள்ள இந்து
கோயிலுக்குப் பதிலாக புதிய கோயிலொன்று நிர்மாணித்துக்
கொடுக்கப்படும் என நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். எனவே தம்புள்ளை
பள்ளிவாசலுக்கும் நிரந்தர தீர்வொன்றினைப் பெற்றுக் கொள்ளலாம் என்ற
நம்பிக்கையோடு மக்கள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்சமயம் பள்ளிவாசலில் சமய கடமைகள் எதுவித தடைகளுமின்றி நடைபெற்று
வருகின்றன. 24 மணிநேரமும் பள்ளிவாசலுக்கு பொலிஸ் பாதுகாப்பு
வழங்கப்பட்டுள்ளது.
பள்ளிவாசல்கள் எங்காவது தாக்கப்பட்டால்
அல்லது அகற்ற முயற்சி செய்யப்பட்டாலும் வாய் மூடி இருக்கும் மெளனிகளாகவும்
பின்னர் கொள்கைப் பிரிவினைகளால் பிளவுண்டு கிடக்கும் சமூகமாகவுமே நம்
சமூகம் இருக்கும் நிலையில் இதுவரை சுமார் 24 பள்ளிவாசல்கள் இனவாத
அச்சுறுத்தலுக்குள்ளாகியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
சம்பவம் இடம்பெற்று ஒரு வருடமான போது கடந்த ஏப்ரல் மாதம் நாம் நேரடியாகச்
சென்று நிலைமைகளை ஆராய்ந்தபோது எம்மோடு உரையாடிய பள்ளி நிர்வாகம் :
நன்றிகள் விடிவெள்ளி
சம்பவம் இடம்பெற்று ஒரு வருடமான போது கடந்த ஏப்ரல் மாதம் நாம் நேரடியாகச் சென்று நிலைமைகளை ஆராய்ந்தபோது எம்மோடு உரையாடிய பள்ளி நிர்வாகம் :
நன்றிகள் விடிவெள்ளி
0 கருத்துகள்: