சென்னை:
14 வயது சிறுமியை சாமியார் ஒருவர் வன்புணர்ந்தது சீரழித்தது தொடர்பாக
சாமியார் சிறுமியின் தாய் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை பெரம்பூரைச் சேர்ந்த 14 வயது சிறுமியை, அறவழிச் சித்தர் என்னும்
பெயரில் குறிசொல்லி வந்த சாமியார் ஒருவர், இரவில் பூஜை செய்வதாகக் கூறி
அழைத்து, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் பலமுறை வன்புணர்ந்து
சீரழித்துள்ளார். சாமியாரின் இந்தத் தகாத செயலுக்கு சிறுமியின் தாயும்
உடந்தை என்பது தெரியவந்துள்ளது. அத்தோடு நில்லாமல் தனது நண்பரான குமார்,
செல்வம் உள்ளிட்டவர்களிடம் சிறுமியை ஒப்படைத்து விபச்சாரத்திலும்
ஈடுபடுத்தியுள்ளார்.
கடந்த பல மாதங்களாக இப்படி சித்திரவதைப்பட்ட
சிறுமி கடந்த மாதம் செல்வம் வீட்டிலிருந்து தப்பி வெளியேறினார். எங்கு
போவது என்று தெரியாமல் திருப்பதிக்குப் போனார். அங்கு மாங்காய் வாங்கி
வி்ற்றுப் பிழைக்க ஆரம்பித்தார். இரவில் சாமி தரிசனம் செய்யும் கியூவில்
சென்று அந்த பக்தர்களுடன் சேர்ந்து தூங்கி சமாளித்துள்ளார். ஆனால் தினசரி
இப்படி அந்த சிறுமி வருவதைப் பார்த்த சிலர் சந்தேகப்பட்டு காவல்துறையிடம்
சிறுமியை ஒப்படைத்தனர்.
பின்னர் அந்தச் சிறுமியிடம் நடத்தப்பட்ட
விசாரணையில் மேற்கண்ட விசயங்கள் அம்பலமானது. இது குறித்து வழக்குப் பதிவு
செய்த காவல்துறையினர் சிறுமியின் தாயார், சாமியார் ஆகியோரை கைது செய்தனர்.
மேலும் தலைமறைவாக உள்ள செல்வம், குமார், லதா, ஜெயா ஆகியோரை வலைவீசி தேடி
வருகின்றனர்.
0 கருத்துகள்: