16 வயது மாணவியை பாலியல் தொந்தரவு செய்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் பிரபல ஆசிரம சாமியார் ஆசாராம்பாபு நேற்று நள்ளிரவு கைது செய்யப்பட்டார். விமானம் மூலம் டில்லி கொண்டு வரப்பட்டு அவர் ஜோத்பூர் கோர்ட்டில் இன்று ஆஜர்படுத்தப்பட்டார். இவரது கைதை கண்டித்து ஆதரவாளர்கள் ரயில் மறியல் போராட்டம் நடத்தினர். இதனால் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

உ. பி, மாநிலத்தை சேர்ந்த இளம் பெண் ஒருவர் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜோத்பூரில் தங்கியிருந்த போது சாமியார் இந்த பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டதாக புகார் எழுந்தது. வெளியே வந்த இந்த இளம்பெண் பெற்றோர்களிடம், சாமியார் ஆசிரமத்தில் நடந்த விவரம் குறித்து கூறினார். இதனையடுத்து பெற்றார்கள் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து வழக்கை துரிதப்படுத்தினர். இவர் மீதான குற்றத்தில் போதிய ஆதாரம் இருப்பதாக கூறிய போலீசார் இவரை ஆஜராக சம்மன் அனுப்பினர். ஆனால் இவர் உரிய நேரத்தில் ஆஜராகவில்லை. இதனையடுத்து மத்திய பிரதேசம் ஆசிரமத்தில் பதுங்கி இருந்த ஆசாராம் கைது செய்யப்பட்டார். கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து சாமியார் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் நடத்தினர்.


பலத்த போலீஸ் குவிப்பு :


கைது செய்யப்பட்ட ஆசாராம் நள்ளிரவில் தனி விமானம் மூலம் டில்லி கொண்டு வரப்பட்டார். விமான நிலையத்தில் சாமியார் ஆதரவாளர்கள் கைது கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். தற்போது அவர் ஜோத்பூர் கோர்ட்டுக்கு அழைத்து செல்லப்படுகிறார். மதியம் கோர்டுக்கு வந்துசேர்ந்தார். இதனையொட்டி அசம்பாவிதம் ஏதும் நடக்காமல் தடுக்க போலீஸ் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.



சாமியாரை நான் நம்பினேன்:


பலாத்காரத்திற்குள்ளளானதாக கூறப்படும் பெண்ணின் தந்தை நிருபர்களிடம் கூறுகையில்: நாங்கள் இந்த சாமியாரை பல ஆண்டுகளாக பின்பற்றி வருகிறோம். இவர் சிறந்த மனிதன் என நினைத்து ஏமாந்து போனேன். அவரை நம்பித்தான் எனது பெண்ணை ஆசிரமத்திற்கு அனுப்பி வைத்தேன். ஆனால் பிரார்தனை முடிந்து சாமியார் தனது அறைக்கு வரச்சொல்லி தவறாக நடந்துள்ளார். இப்படி சாமியார் செய்வார் என நான் நினைத்து கூட பார்க்கவில்லை. இவருக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என்றார்.



காங்., பா.ஜ., மீது தாக்கு:


இதற்கிடையில் இந்த விவகாரம் அரசியல் நோக்குடன் கலக்கும் பாதையில் செல்லத் துவங்கியுள்ளது. ஆசாராம் குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்., தலைவர்களில் ஒருவரான திக்விஜயசிங் கூறுகையில்; ஆசாராம் சாமியார் மீது ஏற்கனவே கொலை உள்ளிட்ட பல்வேறு புகார்கள் உள்ளன. இவரை கைது செய்வதில் தாமதம் ஏற்பட்டதற்கு பா.ஜ.,வே காரணம். தன் மீது குற்றம் இல்லையென்றால் போலீசார் முன்பு சரண்அடைந்து தனது நிலையை தெரிவிக்க வேண்டியதுதானே ? சாமியாருக்கு பா.ஜ.,வுடன் தொடர்பு உண்டு. எதிர்கட்சி தலைவர் சுஷ்மாசுவராஜூவும் , பா.ஜ.,வும் வாய் திறக்காதது ஏன்? என கேள்வி எழுப்பினார்.



குற்றச்சாட்டை நிரூபிப்போம்:


சாமியார் மீதான அனைத்து குற்றச்சாட்டுக்களையும் போதிய ஆதாரங்களுடன் நிரூபிப்போம் என ஜோத்பூர் டி. சி. பி. லம்பா கூறினார்.

0 கருத்துகள்:

துஆக்கள்

தொழிநுட்ப தகவல்கள்

Live TV

ONISLAAM SMS சேவை

SMS ஐ Active செய்ய


Type F (space) ONISLAAM and Send it to 40404 -on Your Mobile Phone (in Sri Lanka & Others, Click Here) ........... F இடைவெளி ONISLAAM என Type செய்து 40404 ற்கு அனுப்புங்கள் (இலங்கையில்)...... ஏனைய நாட்டவர்கள்--- இங்கு Click செய்யுங்கள்

பார்வையாளர்கள்

பிரமலமானவை

செய்திகள்

உங்கள் IP இலக்கம்

Sign by Danasoft - For Backgrounds and Layouts