அமைச்சர்
மேர்வின் சில்வாவுக்கு திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்பது கட்டாயம்
என்றிருந்தால் கண்டி பொலிஸ் நிலையத்துக்கு செல்லவேண்டும் என்று ஜே.வி.பி
தெரிவித்துள்ளது. அண்மையில்
இலங்கைக்கு வருகைத்தந்திருந்த ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர்
நவநீதம்பிள்ளையை தாம் திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக அமைச்சர்
மேர்வின் சில்வா தெரிவித்திருந்தார். இந்த கருத்து இராஜதந்திர
மட்டத்தில் பிரச்சினைகளை உருவாக்கி அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா,
மேவின் சில்வாவுக்காக நவநீதம்பிள்ளையிடம் மன்னிப்பை கோரியிருந்தார்.
இந்தநிலையில் கண்டி பொலிஸாரே மோப்ப நாய்களுக்கு திருமணம் செய்து வைத்தனர்
என்று கூறியுள்ள ஜே.வி.பியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா, பொறுப்பற்ற
அமைச்சர் மேர்வின் சில்வா கட்டாயம் என்றிருந்தால் திருமணம் செய்து கொள்ள
கண்டி பொலிஸுக்கு செல்லுமாறு கோரியுள்ளார். அங்கு அவருக்குரிய மணமகள்
இருக்கலாம் என்று டில்வின் சில்வா குறிப்பிட்டுள்ளார். jvp
0 கருத்துகள்: