இரசாயன ஆயுத தாக்குதலை மேற்கொண்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டிருக்கும்
சிரிய அரசின் வலிமையைக் குறைக்கும் வகையில் வரையறுக்கப்பட்ட தாக்குதலை
மேற்கொள்வதற்கான திட்ட வரைபுக்கு அமெரிக்க காங்கிரஸின் முக்கிய
உறுப்பினர்கள் ஒப்புதல் வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மிக அவதானமான முறையில் வரையறுக்கப்பட்ட இராணுவ நடவடிக்கை தொடர்பாகவே கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளதாகவும் இதனடிப்படையில் ஒபாமா அரசு தாக்குதல்களுக்குத் தயாராகும் அதேவேளை 9ம் திகதி காங்கிரஸ் வாக்கெடுப்பு இடம்பெறலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இதற்கிடையில் அமெரிக்கா ஏவுகணை தாக்குதல்கள் மேற்கொண்டதாகவும் அவை ரஷ்யாவால் வீழ்த்தப்பட்டதாகவும் வதந்திகள் பரவிக்கொண்டிருக்கின்றன. இது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள ரஷ்ய அதிகாரிகள் தமது ராடர்களில் தென்பட்ட இரு ஏவுகணைகள் கடலில் வீழ்ந்ததாகவே கூறப்பட்டதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்: