
தொடர்பிலான செய்தி பிரசுரத்தின் போது தேவையின்றி இன, மத அடையாளங்கள் வெளிப்படுத்தப்படக் கூடாது. இது தொடர்பிலான பொறிமுறைமை ஒன்று உருவாக்கப்பட வேண்டும். இதற்கான பொறுப்பு தேசிய மொழிகள் அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவிடம் ஒப்படைக்கின்றேன். சில முரண்பாடுகள் மோதல்களின் போது தேவையின்றி இன, மத அடையாளங்கள் வெளிப்படுத்தப்படுகின்றன. இதனால் இன மத முரண்பாடுகள் ஏற்படக் கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளது. அண்மையில் இவ்வாறான இரண்டு மோதல் சம்பவங்கள் எனது தலையீட்டினால் இணக்கப்பாட்டுக் கொண்டு வரப்பட்டது என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். அமைச்சரவை கூட்டத்தில் கலந்து கொண்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
0 கருத்துகள்: