நாட்டின் சகல மதங்களையும் நாங்கள் சமமாகவே பார்க்கின்றோம். பெளத்த மதம்
அரசியலமைப்பில் உள்ளபோதும், ஏனைய சகல மதங்களுக்கும் உரிய இடத்தையும்,
கெளரவத்தையும் வழங்கி வருகின்றோம். சிலர் பொய் பிரசாரங்களைப் பரப்பி
வருகின்றனர்.

நாம் முஸ்லிம் மக்களைப் பகைத்துக் கொள்வதாகவும், கிறிஸ்தவ
மக்களைப் புறக்கணிப்பதாகவும் புரளிகள் கிளப்பப்படுகின்றன. மக்கள் இவற்றில்
தெளிவுபெற வேண்டும். என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் கேள்வி எழுப்பினார்.

குருநாகலில் 02-09-2013 நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 62வது நிறைவு மாநாட்டில் உரையாற்றிய ஜனாதிபதி,

தமது விருப்பத்திற்கு ஏற்ப தேர்தல் நடத்துபவரே ஏகாதிபத்தியத் தலைவன். யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்து வடக்கில் தேர்தல் நடத்தியதுடன், 2005இல் இருந்து இதுவரை 11 தேர்தல்களை நடத்தியிருப்பதாகவும், ஆசியாவிலேயே இந்தளவு தேர்தல் நடத்தப்பட்ட நாடு இலங்கை தான்.

வடக்கில் எவரும் வாய்திறக்க முடியாத நிலை இருந்தது. அந்த நிலையை நாமே மாற்றினோம். தற்போது சகலரும் சுதந்திரமாக வாழும் சூழல் நாடு முழுவதும் உருவாக்கப் பட்டுள்ளது. நாட்டில் சகல பகுதிகளிலும் அபிவிருத்தித் திட்டங்கள் நடைமுறைப்படு த்தப்பட்டு வருகின்றன. ஒருமுறை நாட்டைச் சுற்றிப் பார்ப்பவர்கள் இதனைத் தமது கண்களால் கண்டு உணரமுடியும்.

நேற்றும் நான் ஒலுவில் துறைமுகத் தையும், சில பாலங்களையும், கிறிஸ்தவ ஆலயமொன்றையும் திறந்து வைத்தேன். நாட்டின் சகல மதங்களையும் நாங்கள் சமமாகவே பார்க்கின்றோம். பெளத்த மதம் அரசியலமைப்பில் உள்ளபோதும், ஏனைய சகல மதங்களுக்கும் உரிய இடத்தையும், கெளரவத்தையும் வழங்கி வருகின்றோம். சிலர் பொய் பிரசாரங்களைப் பரப்பி வருகின்றனர். நாம் முஸ்லிம் மக்களைப் பகைத்துக் கொள்வதாகவும், கிறிஸ்தவ மக்களைப் புறக்கணிப்பதாகவும் புரளிகள் கிளப்பப்படுகின்றன. மக்கள் இவற்றில் தெளிவுபெற வேண்டும்.

பிரதமர் டி.எம். ஜயரட்ன, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர்
அமைச்சர் மைத்திரிபால சிறிசேன, அமைச்சர்கள் பசில் ராஜபக்ஷ, தினேஷ்
குணவர்த்தன உட்பட பெருமளவு அமைச்சர்கள், அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும்
கட்சிகளின் தலைவர்கள், மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள்,
அஸ்வர் எம்.பி. உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலரும் இந்த மாநாட்டில் கலந்து
கொண்டனர்.

0 கருத்துகள்:

துஆக்கள்

தொழிநுட்ப தகவல்கள்

Live TV

ONISLAAM SMS சேவை

SMS ஐ Active செய்ய


Type F (space) ONISLAAM and Send it to 40404 -on Your Mobile Phone (in Sri Lanka & Others, Click Here) ........... F இடைவெளி ONISLAAM என Type செய்து 40404 ற்கு அனுப்புங்கள் (இலங்கையில்)...... ஏனைய நாட்டவர்கள்--- இங்கு Click செய்யுங்கள்

பார்வையாளர்கள்

பிரமலமானவை

செய்திகள்

உங்கள் IP இலக்கம்

Sign by Danasoft - For Backgrounds and Layouts