இலங்கையில்
மனித உரிமைகளுக்கு மதிப்பற்ற நிலையில் மக்கள் அச்சத்துடன் வாழ்கிறார்கள்
என ஒரு வார கால உத்தியோகபூர்வ விஜயத்தின் பின் கருத்து வெளியிட்டுள்ளார்
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையர் நவநீதம் பிள்ளை.
வடக்கில் இவர் விஜயம் செய்த போது அவசர அவசரமாக சீர் செய்யப்பட்ட நிலவரங்கள் அவரது விஜயத்துக்குப் பின் மீண்டும் பழைய நிலையை அடைந்திருப்பதையும், தம்மை சந்தித்தவர்கள் இராணுவத்தினராலும் அரசாங்கத்தினாலும் மிரட்டப்படுவதையும் சுட்டிக்காட்டியுள்ள அவர் குடிமக்கள் மீது பாரிய அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுவதோடு சர்வாதிகாரப் போக்கே காணப்படுவதாகவும் மனித உரிமை கவுன்சிலின் கவனத்திற்கு இதைக் கொண்டு போகப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
முஸ்லிம் சமூகம் அடக்கி வாசித்த போதும், சிறுபாண்மை வணக்கஸ்தலங்கள் மீதான தாக்குதல்கள் குறித்தும் அவர் தெளிவாகக் குறிப்பிட்டிருப்பதோடு இலங்கை தன்னை மாற்றிக்கொள்ள வேண்டிய அவசியத்தையும் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
வடக்கில் இவர் விஜயம் செய்த போது அவசர அவசரமாக சீர் செய்யப்பட்ட நிலவரங்கள் அவரது விஜயத்துக்குப் பின் மீண்டும் பழைய நிலையை அடைந்திருப்பதையும், தம்மை சந்தித்தவர்கள் இராணுவத்தினராலும் அரசாங்கத்தினாலும் மிரட்டப்படுவதையும் சுட்டிக்காட்டியுள்ள அவர் குடிமக்கள் மீது பாரிய அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுவதோடு சர்வாதிகாரப் போக்கே காணப்படுவதாகவும் மனித உரிமை கவுன்சிலின் கவனத்திற்கு இதைக் கொண்டு போகப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
முஸ்லிம் சமூகம் அடக்கி வாசித்த போதும், சிறுபாண்மை வணக்கஸ்தலங்கள் மீதான தாக்குதல்கள் குறித்தும் அவர் தெளிவாகக் குறிப்பிட்டிருப்பதோடு இலங்கை தன்னை மாற்றிக்கொள்ள வேண்டிய அவசியத்தையும் சுட்டிக்காட்டியிருக்கிறார்
0 கருத்துகள்: