அமைச்சர் வாசுதேவ நாணயக்கார அவர்கள் பொதுபல சேனா ,ராவண பலய ,சின்ஹல ராவைய ஆகிய கடும்போக்கு ,தீவிரவாத அமைப்புக்களை தடை செய்யுமாறு அமைச்சரவையை கோரவுள்ளார் . குறித்த அமைப்புக்களை தடைசெய்ய கோரும் ஆவணத்தை தான் தயாரித்துவருவதாகவும் இன்னும் இரு வாரங்களில் அந்த ஆவணம் அமைச்சரவையில் சமர்பிக்கப்படும் என்றும் அமைச்சர் இன்றைய சண்டே லீடர் ஆங்கில பத்திரிகைக்கு தெரிவித்துள்ளார் .

பொதுபல சேனா ,ராவண பலய ,சின்ஹல ராவைய ஆகியன விரோதத்தையும் , நாட்டில் அமைதியின்மையையும் பரப்புவதாக அமைச்சர் குற்றம்சாட்டியுள்ளார் .

குறித்த அமைப்புக்கள் பகிரங்கமாக (இன மத) வெறுப்பு பிரசாரம் செய்யும் நிலையில் போலீசார் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காது இருப்பதாகவும் அமைச்சர் போலீசார் மீது குற்றம் சாட்டியுள்ளார் .

மேலும் அமைச்சர் நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்பு பிரசாரம் தொடர்பில் ஜனாதிபதிக்கு தான் எழுத்துமூலம் அறிவித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார் .

நாட்டின் யாப்பு எவரும் தாம் விரும்பும் மதத்தை பின்பற்றும் உரிமையை வழங்கியுள்ளது . மக்கள் அச்சுறுத்தல் என்று உணரும்போது அவர்கள் பொலிசாரிடம் முறையிடமுடியும் பொலிசார் நடவடிக்கை எடுப்பார்கள் அல்லது வழக்கு பதிவு செய்யவார் என்றும் தெரிவித்துள்ளார் .

0 கருத்துகள்:

துஆக்கள்

தொழிநுட்ப தகவல்கள்

Live TV

ONISLAAM SMS சேவை

SMS ஐ Active செய்ய


Type F (space) ONISLAAM and Send it to 40404 -on Your Mobile Phone (in Sri Lanka & Others, Click Here) ........... F இடைவெளி ONISLAAM என Type செய்து 40404 ற்கு அனுப்புங்கள் (இலங்கையில்)...... ஏனைய நாட்டவர்கள்--- இங்கு Click செய்யுங்கள்

பார்வையாளர்கள்

பிரமலமானவை

செய்திகள்

உங்கள் IP இலக்கம்

Sign by Danasoft - For Backgrounds and Layouts