குஜராத்
மாநிலத்தில் இஷ்ரத் ஜஹான் உள்ளிட்ட 4 பேர் அநியாயமாக போலி என்கவுண்டரில்
சுட்டுக் கொலைச் செய்யப்பட்ட வழக்கில் மேலும் ஒரு போலீஸ் அதிகாரியை சி.பி.ஐ
கைதுச் செய்துள்ளது.
குஜராத்தில் மோடியின் போலீசார் கடந்த 2004-ஆம் ஆண்டு அஹ்மதபாத்தின்
புறநகர்ப்பகுதியில் நடத்திய என்கவுன்ட்டரில் இஷ்ரத் ஜஹான், ஜாவேத் ஷேக்,
ஏ.ஏ.ராணா, ஜீஷன் ஜோகர் ஆகிய நான்கு பேர் கொல்லப்பட்டனர். இவர்கள் நான்கு
பேரும் லஷ்கர் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்றும் மாநில முதல்வர் நரேந்திர
மோடியைக் கொல்ல இவர்கள் சதித்திட்டம் தீட்டியதாகவும் குஜராத் போலீஸார்
அபாண்டமாக பழி சுமத்தினர்.பின்னர் இஷ்ரத்தின் தாயார் தாக்கல் செய்த மனுவில்
உச்சநீதிமன்றம் நியமித்த சிறப்பு புலனாய்வுக் குழு இந்த என்கவுண்டர்
போலியானது என்பதை கண்டறிந்தது.இதனைத்தொடர்ந்து இவ்வழக்கு சி.பி.ஐ வசம்
ஒப்படைக்கப்பட்டது.
இந்த என்கவுன்ட்டர் வழக்கை விசாரித்து வரும்
சி.பி.ஐ. ஏற்கெனவே ஐந்து போலீஸ் அதிகாரிகளைக் கைது செய்துள்ளது.
இந்நிலையில், சஸ்பெண்ட் செய்யப்பட்ட காவல்துறை துணைக் கண்காணிப்பாளர்
என்.கே.அமீனை சி.பி.ஐ. அதிகாரிகள் வியாழக்கிழமை கைது
செய்தனர்.சொஹ்ரபுத்தீன் ஷேக் போலி என்கவுன்டர் வழக்கில் கடந்த 6
ஆண்டுகளாகச் சிறையில் இருந்த அவர் கடந்த மாதம்தான் ஜாமீனில் வெளிவந்தார்
என்பது குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்: