மட்டக்களப்பு மாவட்டம், ஆரையம்பதி பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் நான்கு
வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சிறுவனை
பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதித்துள்ளதோடு லொறியின் சாரதியை கைது செய்து
விசாரணைகளை மேற்கொள்ளுமாறு மட்டக்களப்பு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி
என்.எம்.அப்துல்லாஹ் உத்தரவு பிறப்பித்தார்.
காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதி, கண்ணகியம்மன் ஆலய வீதியில், வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியை 16 வயது சிறுவன் இயக்கியபோது லொறியின் பின்புறமாக நின்ற சிறுவன் லொறியில் அடிப்பட்டு, அருகில் இருந்த மதிலுடன் நசுங்குண்டு தலை நசுங்கிய நிலையில் அவ்விடத்திலேயே உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றது.
இதன்போது குறித்த லொறியின் உரிமையாளரின் மகனான அகிலேஸ்வரன் அர்ச்சனன் (4வயது) சிறுவனே உயிரிழந்தார்.
குறித்த லொறியை செலுத்திய சிறுவனை கைது செய்து இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்திய போது 1 இலட்சம் ரூபா பிணையில் செல்லுமாறு நீதிபதி என்.எம்.அப்துல்லாஹ் உத்தரவு பிறப்பித்தார்.

0 கருத்துகள்: