“மக்கள் தொடர்பு அமைச்சர் மேர்வின் சில்வாவின் மகன் மாலக சில்வா ஈரானைச் சேர்ந்த இஸ்லாமியப் பெண்ணையே திருமணம் செய்துள்ளார்.
எனவேதான் அண்மைக் காலமாக அமைச்சர் எம்மைத் தாக்கி எமக்கெதிராக கருத்துக்களை
வெளியிட்டு வருகிறார் என பொதுபல சேனாவின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
அவ்வாறில்லாமல் தமக்கு ஆதரவாக கருத்துத் தெரிவித்தால் அமைச்சருக்கோ, அவரது
மகனுக்கோ ஈரானுக்குச் செல்ல முடியாமல் போய் விடும் என அவர் மேலும்
தெரிவித்துள்ளார்.
மார்ச் 25 ஆம் திகதி தனது 69ஆவது பிறந்த
தினத்தைக் கொண்டாடிய அமைச்சர் தனது மருமகளைப் காண ஈரானுக்குச் சென்று சில
நாட்களுக்கு முன்பே நாடு திரும்பியிருந்தார். எனவே அவருடைய அறிக்கை
தொடர்பில் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை என்றும் அவர் கூறினார்.
இந்தியாவை அவமானப்படுத்தி ஊடகங்களுக்கு அறிக்கை விடும் அமைச்சர்
அமெரிக்காவிற்கு எதிராக மௌனம் காப்பது, மறுமுறை அமெரிக்காவிற்குச் செல்ல
தனக்கு வீசா கிடைக்காது என்பதாலேயே என பொதுபலசேனாவின் பேச்சாளர் மேலும்
தெரிவித்தார்.

0 கருத்துகள்: